சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- C-286

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    lotus


    சிந்திக்க அமுத மொழிகள்- C 286


    21-04-2020செவ்வாய்

    Desirelessness is the Highest Bliss 

    – நிசர்கதத்தா மகராஜ்

     

    பயிற்சி—


    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்


     குறிப்பு:    நாளைய (22-04-2020) சத்சங்க நிகழ்ச்சியில் சிந்திக்க        அமுதமொழி      பகுதி 290 ல்

                                        விதி செய்வது குறித்து சிந்திப்போம்.  

     

    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

     

     

  • சிந்திக்க அமுத மொழிகள்- C-285

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- C 285

    12-10-2019 — சனி

    ‘உலக சிக்கல்களை ஒரு நொடியில் உணர்த்திடலாம். ஒருவராலும் அதனை உடன் திருத்திட முடியாது’

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ஏன் அவ்வாறு கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
    2) பின்னர் எவ்வாறு தீர்க்க முடியும்?
    3) இதில் மனவளக் கலைஞர்களின் பெரும் பங்கு என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுதமொழிகள் – 284

    சிந்திக்க அமுதமொழிகள் – 284

                                             02-10-2019 – செவ்வாய்

     “ அறிவின் பயனை அடைய சினத்தை தவிர்க்க வேண்டும்.”

                                                                               அண்ணல் காந்தி அடிகள்.

    பயிற்சி—

    1. என்ன கூறுகிறார் அண்ணல் காந்தி அடிகள்?
    2. அறிவின் பயன் ஒன்றா? பலவா?  
    3. என்னென்ன?
    4. இறுதியான பயன் என்ன?
    5. இதுவரை சினத்தின் தோற்றம், விளைவுகள் பற்றி சிந்தித்தது உண்டா?
    6. அறிவின் பயனை அடைவதற்கு சினம் எவ்வாறு தடையாக இருக்கும்? எவ்வாறு தடையாக உள்ளது?
    7. அத்தடையாகிய சினத்தை எவ்வாறு தவிர்ப்பது?
    8. விலங்கினப் பண்பிலிருந்து மனிதனிடம் வந்துள்ள  சினத்தை தவிர்ப்பது சாத்தியமா?
    9. எவ்வாறு சாத்தியம்?

    வாழ்க அறிவுச் செல்வம்!                        வளர்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்க அமுத மொழிகள் – 330(26-03-2022)

    வாழ்க மனித அறிவு !                          வளர்க மனித அறிவு !!

    lotus

                                           அருள் ஒளி வீச

    சிந்திக்க அமுத மொழிகள் – 330

     

    26-03-2022 — சனி

    “ஆணவம் இல்லாத இடத்தில் அருள் ஒளி வீசும்.”
                                                                                             . . . வள்ளலார்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அருட்பிரகாச வள்ளலார்?
    2) ஆணவம் என்று எதனைக் குறிப்பிடுகிறார்?
    3) அருள் என்பது என்ன?
    4) ‘அருள் ஒளி’ என்பது என்ன?
    5) அருள் நமக்கு வேண்டுமல்லவா?
    6) அருளுக்குப் பாத்திரமாக என்ன செய்ய வேண்டும்?
    7) ‘ஆணவம் இல்லாத இடத்தில்’ என்பதால் அந்த இடம் எது?

    வாழ்க அறிவுச் செல்வம்!                       வளா்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்க அமுத மொழிகள் – 282

    வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 282

     

    29-12-2018 — சனி

    “ பழக்கம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே நல்ல செயல்களையே பழகிக்கொள்ள வேண்டும்”                                                                                                          

                                                                                                                                                                                     . . .    ஓர் அறிஞர்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர்?
    2) பழக்கம் என்பது என்ன?
    3) பழக்கம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது என்றால் என்ன பொருள்?
    4) பழக்கம் என்பது சக்தி வாய்ந்தது என்று சொல்லி இருக்கலாம் அறிஞர். ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது என்கிறார் அறிஞர். இதனை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்?
    5) ஒழுக்கம் என்பதற்கும் பழக்கம் என்பதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா?
    6) பழக்கத்திற்கும் எண்ணத்திற்கும் தொடர்புள்ளதா?
    7) இந்த அறிஞரும் வேதாத்திரி மகரிஷி அவர்களும் பழக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது என்கின்ற கண்டுபிடிப்பில் எவ்வாறு இணைகிறார்கள்?
    8) விளக்கம் என்பதற்கும் பழக்கம் என்பதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா?
    9) பண்பேற்றம், பழக்கம், விளக்கம், ஒழுக்கம் இந்நான்கிற்கும் என்ன தொடர்பு?
    10) அறிஞர் ரூஸோ ஒழுக்க வாழ்வு பற்றி என்ன கூறுகிறார்? (இந்த இணையதள சத்சங்கத்தில் அது பற்றி உரையாடி இருக்கிறோம்.)
    11) ‘இளமையில் கல்’ என்று ஏன் கூறுகின்றார்?
    12) ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ ,’தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பதற்கும் பழக்கத்திற்கும் என்ன தொடர்பு?
    13) இச்சிந்தனையின் முடிவில் நாம் என்ன முடிவிற்கு வர இருக்கிறோம்?
    14) வேதாத்திரியக் கல்வி முறையில் ஒழுக்கப்பழக்க அறிவு இடம் பெற்றிருப்பதாலும், கல்வி என்பது பள்ளியிலிருந்து ஆரம்பிப்பதால், கருத்தியலும், செய்முறையும் இணைந்த ஒழுக்கவியல் பாடம் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை மற்ற பாடங்களைப்போல் கட்டாயப் பாடமாக்க வேண்டும். இந்த புனித அலைகளை எல்லா அருளாளர்களையும் மனதில் நினைந்து வணங்கி வான்காந்தத்தில் பரவவிடுவோம்.

     

    வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                                  வளா்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்க அமுத மொழிகள் – 281

    வாழ்க மனித அறிவு!                                                        வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 281

     

    21-12-2018 — வெள்ளி.

    “மனிதனுடைய சிந்தனையும் செயலும் சேர்ந்து செயல்படும்போது உண்டாகும் இன்பம் பேரின்பமாகும்.”

    . . . புளூடார்க்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர் புளூடார்க்?
    2) சிந்தனையும் செயலும் சேர்வது என்பது என்றால் என்ன பொருள்?
    2) சிந்தனையும் செயலும் சேர்ந்து செயல்படும்போது இன்பம் உண்டாகுமா? எப்படி?
    3) அந்த இன்பம் எப்படி பேரின்பமாகும்?
    4) மனித மனம் லாபம் பார்த்து (கணக்குப்பார்த்து – human mind is so calcurlive) செயல் புரியும் தன்மை
    உடையதால், இன்பத்தைவிட பேரின்பம் அதிகமாக இருக்கும்போது அறிஞர் புளூடார்க் கூறுகின்றபடி
    சிந்தனையையும் செயலையும் சேர்த்து செய்து பேரின்பம் அடையலாமே!
    5) இதே போன்று சிந்தனையுடன் செயலையும் இணைத்து ஏதாவது கவி அருளியுள்ளாரா வேதாத்திரி
    மகரிஷி அவர்கள்?
    6)  இரு அறிஞர்களும் எவ்வாறு இணைகிறார்கள் இவ்வுண்மையின் கண்டுபிடிப்பில்?

     

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள் – 280

    வாழ்க மனித அறிவு!                                             வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 280

     

    08-12-2018 — சனி

     

    “ சமமான உணர்ச்சிகளும், அதில் ஊக்கி விடப்பட்ட உணர்ச்சிகளும் இன்பம் என்று சொல்லாம்.”

    . . . வேதாத்திரி மகரிஷி.

    பயிற்சி—

    1) அமுதம் என்றால் என்ன?

    2) ‘அமுதம்’ என்கின்ற சொல்லின் பொருள்படி அல்லது ‘அமுதம் என்பதற்கான உங்களது வரையறைப்படி இந்த அமுத மொழியால் அறிவு அமுதம் பருகவில்லையா?
    3)என்ன   கூறுகிறார் இன்ப-துன்ப இயல்(Science of Enjoyment and Suffering) அருளியவேதாத்திரிமகரிஷிஅவர்கள்?
    4) உணர்ச்சிஎன்றால் என்ன?
    5) சமமான உணர்ச்சி என்றால் என்ன?
    6) ஊக்கிவிடப்பட்டஉணர்ச்சி என்றால் என்ன? 

    7) இதனை எவ்வாறு கண்டுபிடித்தார் மகரிஷிஅவர்கள்?

                                அப்படியானால்
    8) எது துன்பம்?
    9) எது அமைதி?
    10) எது பேரின்பம்?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                     வளா்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்க அமுத மொழிகள் – 279

    வாழ்க மனித அறிவு!                                              வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 279

     

    07-12-2018 — வெள்ளி

    “ பிரபஞ்ச இயக்கங்கள் அனைத்திலும் எண்ணம்தான் உயர்வானது.”

                                                                                                                 . . . வேதாத்திரி மகரிஷி.
    பயிற்சி—
                             1) என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

                   2) எண்ணத்தை இயக்கம் என்கிறாரே?  எண்ண இயக்கத்தை  பிரபஞ்ச இயக்கத்தோடு ஒப்பிடுகிறாரே! இது எப்படி?

                             3) இத்தகைய சிறப்புடைய இயக்கமான எண்ண ஆற்றலைக் கொண்ட மனிதகுலம் ஏன் அல்லல் பட வேண்டும்?
                             4) அல்லலுக்கு என்ன தீர்வு?
                             5) எண்ணம் பற்றி பல அறிஞர்கள் கூறியிருந்தாலும் இவ்வாறாக வேறு யாராவது கூறியிருக்கிறார்களா?

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                         வளா்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்க அமுத மொழிகள் – 278

    சிந்திக்க அமுத மொழிகள் – 278

                

       24-11-2018 — சனி

    lotus

     அறிவின் பயனை அடைய சினத்தைத் தவிர்க்க வேண்டும்.”   அண்ணல் காந்தி அடிகள்.

    பயிற்சி—

    1)   என்ன கூறுகிறார் அண்ணல் காந்தி அடிகள்?

    2)   அறிவின் பயன் ஒன்றா? பலவா?

    3)   என்னென்ன?

    4)   இறுதியான பயன் என்ன?

    5)   அறிவின் சக்தியும் பயனும் ஒன்றா? அல்லது வேறு வேறா?

    6)   அறிவின் பயனை அடைய சினம் தடையாக உள்ளதா?

    7)   சினம் அறிவின் பயனை அடைவதற்கு எவ்வாறு தடையாக உள்ளது?

    8)   அறிவின் பயன், சினம் தவிர்த்தல் இந்த இரண்டில் எது முக்கியம்?

    9)   அத்தடையாகிய சினத்தை எவ்வாறு தவிர்ப்பது?

    10)  அச்சக்தியை/அறிவை வளர்த்துக் கொள்ளவதென்றால் எவ்வாறு வளர்த்துக்கொள்வது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                       வளா்க அறிவுச் செல்வம்

     வாழ்க மனித அறிவு                                                                  வளர்க மனித அறிவு


     

     

  • சிந்திக்க அமுத மொழிகள் – 277

    சிந்திக்க அமுத மொழிகள் – 277

                

       23-11-2018 — வெள்ளி

    lotus

     

    அறிவுதான் சக்தி. அதனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.”    சுவாமி விவேகானந்தர்.

     

    பயிற்சி—

    1)   என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?

    2)   அறிவு தான் சக்தி என்றால் என்ன பொருள்?

    3) அச்சக்தியை/அறிவை வளர்த்துக் கொள்ளவதென்றால் எவ்வாறு வளர்த்துக்கொள்வது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                       வளா்க அறிவுச் செல்வம்

     வாழ்க மனித அறிவு                                                                  வளர்க மனித அறிவு


     

  • சிந்திக்க அமுத மொழிகள் 276

    வாழ்க மனித அறிவு                                                                                    வளர்க மனித அறிவு

     

    சிந்திக்க அமுத மொழிகள் -276

                    10-11-2018 — சனி

     உன் கொடிய பகைவன் உன்னிடம் இருக்கும் அறியாமைதான்” -அறிஞர் லா ரோஷ் புக்கோ.

     

    பயிற்சி—

    1)   என்ன கூறுகிறார் அறிஞர் லா ரோஷ் புக்கோ?

    2)   அறியாமை அவ்வளவு கொடியதா?

    3)   என்ன செய்யும் அறியாமை?

    4)   அவ்வாறெனில் எவ்வாறு அறியாமை போக்கிக் கொள்வது?

    5)   அதற்கான பயிற்சி உள்ளதா?

    6)   சுயமாக அறியாமையைப் போக்கிக் கொள்ள முடியாதா?

    7) அறியாமை நீங்கினால் விளைவு என்ன?

     வாழ்க அறிவுச் செல்வம்                            வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள் – 275

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

    சிந்திக்க அமுத மொழிகள் – 275

                

       09-11-2018 — வெள்ளி

     Analysis_of_Thought

    துவக்கத்தை விட முடிவை பற்றி அதிகமாக சிந்தனை செய்ய வேண்டும்” -அறிஞர் ஷோபன்.

                                                                           

    பயிற்சி—

    1) என்ன கூறுகிறார் அறிஞர் ஷோபன்?

    2) துவக்கம் என்றால் என்ன? முடிவு என்றால் என்ன?

    3) துவக்கத்தைவிட ஏன் முடிவு பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும் என்கிறார் அறிஞர் ஷோபன்?

    4)  அறிஞர் ஷோபனும் வேதாத்திரி மகரிஷி அவர்களும் எவ்வாறு இணைகிறார்கள் இந்த கண்டுபிடிப்பில்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                      வளா்க அறிவுச் செல்வம்