C259-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 10/10

 

இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 10/10

FFC – C259 

                             

08-01-2017-ஞாயிறு 

     சென்ற விருந்திலிருந்து, துறவு பற்றி திருவள்ளுவர், மற்றும் மகரிஷி அவர்கள் கூறுவது பற்றி ஆராய்ந்து வருகிறோம். அதனைத் தொடர்ந்து இந்த விருந்திலும் மேலும் மகரிஷி அவர்கள் துறவு பற்றி கவிகள் மற்றும் உரைநடை வாயிலாகவும் கூறுவதனை அறிந்து கொள்வோம்.

 sanyasam

                 பாடலின் பொருள்: முதலில் ‘வியாசம்’ என்கின்ற வார்த்தைக்குப் பொருள் காண்போம். ‘வியாசம்’ என்றால்

1)   விரிவு

2)   கட்டுரை

3)   பகுத்தறிவு என்று பொருள்.

கட்டுரை என்றால் ஒன்றைப் பற்றி விரிவாக தகவல் தந்து எழுதுவது.

    இப்போது ‘தன்வியாசம்’ என்கின்ற சொல்லிற்கு வருவோம். தன்வியாசம் என்றால் தன்னைப்பற்றிய சரித்திரத்தை, விரிவாக, முழுவதுமாக பகுத்தறிவோடு அறிவது.

     அடுத்ததாக சன்யாசம் என்கின்ற சொல்லிற்கு வருவோம்.

 சன்யாசம் என்றால் நடைமுறையில் உள்ள பொதுவான விளக்கம் யாதெனில்: — உலகப் பற்று, குடும்பப் பாசம், முதலியவற்றை விடுத்த நிலை, துறவு என்று பொருள்.

 

   கவியின் பொருளுக்குள் செல்வோம். தன்னுடைய பூர்வீக சரித்திரத்தை முழுவதுமாக பகுத்தறிவோடு அறிந்த அறிவாளி, சத்து, சித்து, அனந்தனாகிய தன்வியாசம் அறிந்தவர் வாழும் நிலையினை விளங்கிக் கொள்ளாத மக்களால், ‘குடும்பப் பொறுப்பை உதறிவிட்டு, சன்யாசம் மேற்கொண்டு விட்டார்’ என்றுத் தவறாக ‘சன்னியாசம்’ என்கின்ற சொல் பயன் படுத்தப்பட்டு வருகின்றது.

 சந்யாசிக்கும் பசிக்கும்.

 சந்யாசிக்கும் உடை தேவை.

சந்யாசிக்கும் உறைவிடம் தேவை.

 

ஆகவே சாதாரண மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம் சந்யாசிக்கும் தேவை.

அவர், மக்களிடமிருந்து வேறுபட்டுக் காண்பதில் எவ்வாறு வித்தியாசப்படுகின்றார்?

இன்பம் துய்த்தலில் அளவும், முறை இருக்கும்.

ஒழுக்க நெறி கொண்ட வாழ்வு வாழ்வார்.

நிலையில்லாத தன்மையை நினைவில் கொண்டு மக்களுடனே மக்களாக வாழ்வார்.

POST 29-4-15-FFC-78- இனிதி-  ஈட்டல்-29-4-15 RCD FR NAG

 

இது வரை மகரிஷி அவர்கள் துறவு பற்றி கவியின் வாயிலாகப் பேசியவற்றைக் கேட்டோம்.

இப்போது உரைநடை வாயிலாகத் துறவு பற்றி மகரிஷி அவர்கள் நம்முடன் பேசுவதைக் கேட்போம்.

1)   துறவறம் என்பது உறவிலே கண்ட உண்மை நிலைத் தெளிவே!

2)   துறவை விடுதலையோடு (liberation) இணைத்துப் பேசுவதைக் கேட்போம். உண்மையை உணர்ந்த அறிவின் தெளிந்த கருத்தே துறவு, அதுவே விடுதலை. அது என்ன விடுதலை? அஞ்ஞானி புலன்களில் சிறைப்படுத்திக் கொண்டு(get trapped by his own senses) வாழ்வதிலிருந்து விடுபட்டு, அளவும், முறையும் காத்து வாழ்வது விடுதலை எனப்படுகின்றது. மீண்டும் பிறவியில்லை என்பதே துன்பச் சிறையிலிருந்து விடுதலைதானே!

 

3)   காயினை மூடிவைத்து கனியச் செய்வது போன்றது உலகியலோடு ஒழுகி இல்லறம் ஆற்றாத துறவு.   —- இன்னும் ஏன் அச்சம் நமக்கு இறைவனை நாடுவதில்? வேதாத்திரிய இறை உணா் ஆன்மீகத்திற்கு அச்சம் தேவையில்லை. ஆம், அச்சம் தேவையில்லை!   எல்லா நிலைகளிலும் வழிகாட்டும் மந்திரங்களைக் கொண்டிருக்கின்றது இயற்கை/இறை மனிதகுலத்திற்கு கருணையோடு அருளியுள்ள திருவேதாத்திரியம்.

4)   உற்ற உலகிலோடொழுகி இல்லறம் ஆற்றிப் பெற்ற அறிவின் உயர்வே பெருந்துறவு.

 

5)   துறவையும் உள்ளத்தூய்மையும் இணைத்துப் பேசுவதைக் கவனிப்போம். உறவிலே அமைந்துள்ள உண்மையை உணர்ந்திடு. துறவிலே உள்ள உள்ளத்தூய்மை பெற்றுய்யலாம். ஆகவேதான் மகரிஷி அவர்கள்,

அறநெறியில் விழிப்புடனும், பொறுப்புடனும் செயல்களாற்றி,

எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் தூய்மை அடைந்துவிட்டாலும்,

 இறை உணா்வு பெறுவது அதனுடன் முழுமை அடையாதலால், அதாவது முதல் இரண்டு படிகளிலே முடிவு பெறாமையால்,

பாடலின் அடுத்த நான்கு வரிகளில் துறவைப் பற்றித் தெளிவடைந்த உயர்அனுபவத்தைக் பேரின்ப நிலைகளின் மூன்றாவதும் மற்றும் நான்காவதும் இறுதியுமான படிகளாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

 6) வெறுத்து ஒதுக்குவது துறவாகாது, அறிந்து உணர்ந்து, தொடர்பு மற்றும் உறவினைச் சரியாகக் கணக்கிட்டு அளவு முறையுடன் அனுபோகம் கொள்ளும் விழிப்பு நிலை கொண்ட மனநிலைதான் துறவு என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் துறவி என்பவர் யார் எனக் கூறுவதனைக் கவனிப்போம்.

துறவி பற்றி ….

துறவறத்தான் என்பவர், பொருளீட்டிக் காப்பதைத் தவிர்த்து, அறிவுத் துறையில் உயர்ந்து, அதாவது அறிவின் இருப்பிடம் மற்றும் சரித்திரம் அறிந்து பிறர்க்கு எடுத்துச் சொல்லி தொண்டாற்றுபவர் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    நான்கு வாரங்களாக ‘இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே!’ என்கின்ற தலைப்பில், அறிவினரான வேதாத்திரி மகரிஷி அவர்களை, அவ்வையார் கூறுவது போல் நினைவு கொள்வது எப்படி என்று ஆராய்ந்து வந்திருக்கிறோம். அறிவினரைக் கனவிலும், நனவிலும் காண்பது என்பது வார்த்தைக்கு உள்ள பொருளில்(literal meaning) எவ்வாறு சாத்தியம் எனத் தோன்றலாம். அவ்வையார் அறிவினரோடு பாமரன் சேர்ந்ததால் ஏற்படும் பிணைப்பின் தீவிரத்தின் (intensity of bond between Guru and disciple) அளவை வேறு எவ்வாறு கூறமுடியும்? அவ்வையார் கூறுவது போல் அறிவினரைக் கனவிலும், நனவிலும் காண்பது சாத்தியமா என்பதற்கு வருவோம்.   அறிவினர் கூறும் அறிவுரைகளை சிரமேற்கொண்டு, ரசித்து. மதித்துக்கும் நிலை சீடனுக்கு இருக்குமேயானால் அறிவினரோடு பிணைப்பு அதிகமாகும்.

   சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் மூச்சுவிடுவதுபோல் சிந்தனை   செயல்பட ஆரம்பித்தால், இறையின் திருவிளையாடல் இல்லாத எந்த நிகழ்ச்சியும் இல்லை என்பதால் அங்கே இறைவனின் திருவிளையாடலைக் கண்டு ஆனந்தப்படலாம். அவ்வாறு ரசிக்கும் போது கூடவே அறிவினரின் நினைப்பும் வந்துவிடும். அறிவினரோடு சேர்ந்த பலன்தானே எப்போதும் சிந்திப்பது!

   இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும், நனவிலும், காண்பதுதானே என்று சிந்திக்க ஆரம்பித்து, இயல்பூக்க நியதியினை மனிதன் தன்னுடைய பண்பேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்திக் கொண்டு, பிறவிப்பயனை அடைவது என்பதனை அறிந்து கொண்டோம்.   அத்துடன் மகரிஷி அவர்கள் பிறவிப்பயனை அறிந்து, தான் எவ்வாறு இறை உணர்வு பெற்றார் என்கின்ற அனுபவத்தையும் அறிந்து

கொண்டோம். இறை உணர்வு என்பது சாதாரணமானவர்களுக்கு அரிதாக இருந்ததை சாதாரணமானவர்களும் இறை உணா்வு என்கின்ற புனிதச் சொற்றொடரை அன்றாட வாழ்வில் பயன்படுத்தவும், அதற்கான பயிற்சிகளையும் முயற்சியோடு மேற்கொள்ளும் காலம் திருவேதாத்திரியத்தால் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பது இயற்கையின் தன்மாற்ற சரித்திரத்தில் முக்கிய திருப்புனையாகும். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

   வேறொரு சமயத்தில் பிறவிப்பயன் என்பது என்ன, அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது, அதனை எவ்வாறு அடைவது, இறை உணர்வு என்பது முறையான – சரியானத் துறவையும் அடக்கிக் கொண்டது என்பதனையும் பார்ப்போம். ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பது இயற்கையின் தன்மாற்ற சரித்திரத்தில் முக்கிய திருப்புனையாகும். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

   வேறொரு சமயத்தில் பிறவிப்பயன் என்பது என்ன, அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது, அதனை எவ்வாறு அடைவது, இறை உணர்வு என்பது முறையான – சரியானத் துறவையும் அடக்கிக் கொண்டது என்பதனையும் பார்ப்போம். இன்றைய சிந்தனையை மகாகவி பாரதியாரை நினைவு கூர்ந்து வணங்கி முடித்துக் கொள்வோம். வாழ்க வளமுடன்.

POST 29-04-15-FFC-78-இ இ ஏன ஏழுது பாரதி

 மகாகவி பாரதியார் தான் எழுதுவது எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என வாணியை வேண்டுகிறார்.

1)   தெளிவான சிந்தனை வேண்டும் என்கிறார்.

2)   தெளிவான பேச்சு வேண்டும் என்கிறார்.

3)   தெளிவான எழுத்து ஆகிய மூன்றும் வேண்டும் என வேண்டுகிறார் மகா கவி பாரதியார்.

வாழ்க பாரதியாரின் அறிவாற்றல். எட்டட்டும் பாரதியாரின் அறிவாற்றல் எல்லோருக்கும். மகாகவி பாரதியார் கூறுவது போன்றுதானே பாரதியாரின் இளவலான வேதாத்திரி மகரிஷி அவர்களின் எழுத்துக்களும் பாடல்களும் உள்ளன?  வாழ்க திருவேதாத்திரியம். வளா்க திருவேதாத்திரியம்.

   அடுத்த விருந்தில் புதியதொரு சிந்தனையில் சந்திப்போம்