சிந்தனை விருந்து என்றால் என்ன? சிந்தனை விருந்து என்றால் என்ன? (நேற்றையத் தொடா்ச்சி) 2/2

வாழ்க மனித அறிவு                                                                    வளர்க மனித அறிவு
                      சிந்தனை விருந்து என்றால் என்ன?                                                                                         
   07-11-2014

                                                                              FFC – 11

   அறிவிற்கு சிந்தனை என்கின்ற உணவின் அவசியத்தையும், சிறப்பையும் கருதி அதனை விருந்து என அழைக்கப்படுகின்றது, அதாவது சிந்தனை விருந்து. சிந்தனை செய்ய எந்த ஆராய்சிக் கூடமோ, கருவியோ அவசியமில்லை. உயிருள்ள, மனமுள்ள, அதாவது அறிவுள்ள மனிதன் சிந்திக்கலாம். அறிஞர்கள் தானாகவே சிந்திப்பர். சிலர் அறிஞர்களின் தூண்டுதலால் சிந்திப்பர். நாளடைவில் அந்த சிலரும் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்துவிடுவர். சிந்திப்பது அரிய கலை. சிந்திக்கப் பழக வேண்டும். சிறந்த சிந்தனை
                  • அறிவிற்கு உயர்வை அளிக்கும்.
                 • வாழ்க்கையில் தெளிவினை உண்டாக்கும்.
                  • சிந்தனை இருளைப் போக்கி வாழ்வில் விளக்கேற்றும்.
                  • சிந்தனைப் பிரச்சனைகளைத் தீர்க்கும்.
                  • சிந்தனை அறிவிற்குச் செல்வமாகும்.
                  • சிந்தனை எப்போதும் விழிப்பு நிலையிலேயே இருக்கச் செய்யும்.
      மூச்சை யாரும் விரும்பி விடுவதில்லை. அது இயல்பாக நடக்கின்றது. அதுபோல் சிந்தனை செய்வது இயல்பாக இருக்க வேண்டும். பழக்கமாகிவிட்டால் மூச்சு விடுவது போல் சிந்தனையும் இயல்பாகிவிடும்.   அதற்கு ஒரு உதாரணம் வேதாத்திரி மகரிஷிகளாவார் மகரிஷி அவர்கள் வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி செய்வது தனக்கு நாளடைவில் பழக்கமாகி விட்டது என்கிறார் தனது வாழ்க்கை விளக்கத்தில். சிந்தனை   சுகம் தரும்.
      தினம் தினம் சிந்திக்க வேண்டுமா? நேரம் கிடைக்கும் போது சிந்திக்கலாமா? எந்நேரமும் சிந்திக்க வேண்டும். மற்ற வேலைகள் பாதிக்காதா? மற்ற பணிகளைச் செய்து கொண்டே சிந்தனை செய்ய முடியுமா? ஒன்றே பலவாகிய நாடகத்தில்(சுத்த அத்வைதம்). எந்த பணியைச் செய்வதும் அது இறையின் நிகழ்ச்சி தானே. அதனால் எந்தப் பணியிலும் இறையின் செயல்பாட்டினை அறிந்து கொண்டு மகிழலாமே.
         மனிதன் எண்ணுகின்றானே. அது சிந்தனை இல்லையா? எல்லோரும்தான் எண்ணுகின்றனர். எண்ணுவது சிந்தனை இல்லை. “சி;ந்தனையாளர்” என்று இந்த சமுதாயம் ஒரு சிலரை மட்டுமேதான் அழைக்கின்றது. எண்ணுவது சிந்தனையால் எல்லாருமே சிந்தனையாளர்களா? சிந்தனை ஆழ்ந்து இருக்க வேண்டும். விருப்பத்தோடு சிந்திக்க வேண்டும். விடையும், தெளிவும் கிடைக்கும் வரை சிந்திக்க வேண்டும். ஏன், எதற்கு, எப்படி என வினா எழ வேண்டும்.
         சிந்தனையாளருக்கு இயற்கையே ஆசானாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றது. இயற்கை வழிகாட்டவில்;லை எனில் வேறு யார் வழிகாட்டுவது? சிந்தனையால் உள்ளொளி பெருகும்.
     சிந்தனையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் கருதிதான் வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் சிந்திப்பதற்கான நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
         சென்னை வானொலி நிலையம் காலையில் குறளமுதம், பிறகு சான்றோர் சிந்தனை போன்ற நிகழ்ச்சிகள் ஒலி பரப்பி வருகின்றது. செய்தித் தாள்களில் ஆன்மிக சிந்தனை என்கின்ற தலைப்பிலே அன்றைய சிந்தனை விருந்து இடம் பெறுகின்றது.
     தொலைக்காட்சி வந்த பிறகு வானொலி கேட்பவரின் எண்ணிக்கை மிகமிகக் குறைந்து விட்டது. தொலைக்காட்சியிலும் சிந்தனைக்கான நிகழ்ச்சிகள் உண்டு. அவை காலை 6.00 மணிக்கு மட்டுமேதான் இடம் பெறும். அப்படி வானொலி கேட்பவர்களில் சான்றோர் சிந்தனை, குறளமுதம், போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்பவர்கள் மிக மிகக் குறைவாகத்தான் இருப்பர். ஏனெனில், காலையில் ஆறு மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்திருப்பதே அரிது. அப்படி எழுந்தாலும் அலுவலகம் புறப்படுவதற்கே நேரம் சரியாக இருக்கும். அவ்வாறு வாழ்க்கை இயந்திரமயமாகிவிட்டது.
       ஊடகங்கள் மூலமாக சிந்திக்க வைக்கின்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
     எழும்போதே சிந்தனையில் அந்த நாளைத் துவக்கினால் அந்த நாள் முழுவதும் அறிவு அதே சிந்தனையில் விழிப்புடன் இருக்கும். அதுதான் அறிவிற்கு விருந்து. அதில் சுகம் உண்டு.   அதோடு மட்டுமல்லாது சிந்தனையை வளர்க்கக் கூடிய நூல்களையும் தினமும் படிக்கும் பழக்கம் வேண்டும்.
      ஊடகங்களில் ஒன்றுதான் இணையதளமும். இதன் மூலம் அறிவிற்கு சிந்தனை விருந்து அளிக்கவே “அறிவிற்கு விருந்து” என்கின்ற பகுதி தொடங்கப்பட்டுள்ளது. அந்த விருந்தினை உண்டு களிப்பதற்கு அன்புமிக்க பார்வையாளர்களாகிய உங்களது ஒத்துழைப்பு மிக மிக அவசியம். நீங்கள் பயன் பெற வேண்டும். உங்கள் நண்பர்களுக்கும் இந்த ‘Prosper Spiritually’ (ஆன்ம செழிப்புறு) இணைய தள சத்சங்கத்தைப்(Satsangh through Website) பற்றித் தெரிவியுங்கள். உங்கள் கருத்துக்களையும், படித்துப் பயன் பெற்றதையும் (feed back) தயவு செய்து தெரிவிக்கவும்.
 வாழ்க மனித அறிவு, வளர்க மனித அறிவு.
வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச்; செல்வம்.
*****
வாழ்க அறிவுச் செல்வம்                                                             வளா்க அறிவுச் செல்வம்