சி.ப. (த) – எண்.1- 02

29-Oct-2014

குறிப்பு: முகப்பிலுள்ள இப்பயிற்சியின் நோக்கத்தை வாசிக்காதவர்களின் வசதிக்காக, இப்பயிற்சிக்குள் செல்லும் முன் இப்பயிற்சியின் நோக்கத்தை அறிந்து விட்டு பயிற்சிக்குள் செல்வதற்காக மீண்டும் இப்பயிற்சியின் நோக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நோக்கத்தை முகப்பில் வாசித்தவர்கள் நேரிடையாக பயிற்சிக்குள் செல்லலாம். வாழ்க வளமுடன்.

இப்பயிற்சியின் நோக்கம்

”அறிவிற்கு விருந்து”ப் பகுதியில் ஒரு பக்க அளவிலே சிந்தனை விருந்து தரப்பட்டுள்ளது. இது ஒரு, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விருந்தாகும். இதுவும் சிந்தனையைத் தூண்டி விடும். ஆனால் ”சிந்திக்க வினாக்கள் மட்டும்” என்கின்ற இப்பயிற்சியில் வினாக்களை மட்டும் தந்து விட்டு விடையைத் தரவில்லையே என நினைக்க வேண்டாம். அவரவர்களே சிந்திக்கப் பழக வேண்டும்(சுய சிந்தனை) என்பதுதான் இப்பயிற்சியின் நோக்கம். இங்கே அறிவிற்கான விருந்தை நீங்களே தயார் செய்து அருந்துவதாகும். எனவே சிந்தனையைத் தூண்டுவதற்கான வினா (thought provoking questions) மட்டுமே தரப்பட்டுள்ளது.

இந்த வினாவையே சிந்தனையாகக் கொண்டு விடையைக் கண்டுபிடிப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். சிந்தனைக்குரிய இக்கேள்வியினைச் சிந்திக்க சிந்திக்க சிந்திப்பது பழக்கமாகும். நீங்களே ஒரு நிலையில் சிந்தனை வினாக்களுக்குரிய விடையை கண்டுபிடிப்பீர்கள். அப்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அது பேரின்ப நிலைக்கான வாயில். பயிற்சிக்குள் செல்வோம்.

சி.ப. (த) – எண்.1- 02 நாள் 29-10-2014

சிந்திக்க — வினாக்கள்

  1. இயற்கையின் ஆரம்பம் என்ன? இயற்கை எங்கிருந்து ஆரம்பித்தது?
  2. பரிணாமம் (என்றென்னும் நிரந்தரமான ஆற்றலின் தன்மாற்றம்) இன்னும் பூர்த்தியாகவில்லையா?
  3. பூர்த்தியாகிவிட்டது என்றால் எப்படி சொல்கிறீர்கள்? பூர்த்தியாகவில்லையெனில் ஏன்?
  4. மனிதப் பிறவிக்கு இயற்கை வைத்துள்ள குறிப்பிட்ட நோக்கம் யாது?
  5. இயற்கை என்கின்ற சொல்லுக்கு எதிர்ச் சொல் உண்டா? இதற்கான உங்கள் விடையினை நியாயப் படுத்துவீர்களா?
  6. இறை எங்கும் உள்ளது என்கிறார்கள் அறிஞர்கள். இது அதற்கு (இறைக்கு) சாத்தியமா? இறை இல்லாது ஒரு பொருள் இருக்க முடியாதா? உங்கள் விடையினை நியாப்படுத்துங்கள்.

QTP (ENG) – NO.1- 02

QUESTIONS TO PONDER

1. What is the origin of Nature? Where from has Nature begun?

2. Is evolution (Transformation of Eternal power) is incomplete? If your answer is yes how do you say that ? If no why?

3. What is the specific purpose set by Nature for human birth?

4. Is there a word opposite to the word “NATURE” ? Can you justify your answer?

5. God exist everywhere. Is it possible for HIM? How ? Without God does anything exist ? Justify your answer.