சிந்திக்க வினாக்கள்-71

வாழ்க மனித அறிவு                                                               வளர்க மனித அறிவு

 

11-05-2015— திங்கள்

கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்யவும்.

1) எப்போதும் விழிப்போடும், ———– யோடும் ஆற்றும் செயல்களினால் —– ———– தீமைகள்
தடுக்கப்படும். …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

2) மனம், உயிர், மெய்ப்பொருள் என்ற மறைபொருட்களை விளங்கிக் கொள்வதற்கு ஏற்ற ஓர் ஆற்றலை ——— பெற்றிருக்கும் சிறப்பு நிலைக்குத்தான் ———- ——— என்று பெயர். …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

விடை

சிந்திக்க வினாக்கள்-70

07-05-2015— வியாழன்

அறிவாட்சித் தரம் என்பது என்ன? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றது?

விடை:-

1) மனிதனுடைய ஒட்டுமொத்த தன்மைகள் அறிவாட்சித் தரம் எனப்படுகின்றன. செயல் மற்றும் மனதால் மனிதன் பெறும் தன்மைகள் கருமையத்தில் சுருங்கி பதிவாகின்றன. அது மட்டுமல்லாமல் எண்ணில் அடங்காத தலை முறைகள்தோறும் பெற்ற அனுபவங்கள் கருத்தொடர்பு வழியாகத் தொடா்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கருவின் வழியாக வரும் கருமையப்பதிவுகளான பழவினையும் (சஞ்சித கா்மம்.- சஞ்சி means bag i.e. மூட்டை) தன் செயல்களினால் வரும் பதிவுகளான புகுவினையும் (பிராரப்த கர்மம்). சேர்ந்து ஒரு மனிதனின் தன்மையாக உள்ளது. அதனை அம்மனிதனின் அறிவாட்சித்தரமாகக்(personality) கூறுகிறார் மகரிஷி அவர்கள். பழவினை, புகுவினை ஆகியவற்றிற்கேற்ப மனிதனின் அறிவாட்சித் தரம் உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ இருக்கும்.

2) ஏன் மனிதனின் தன்மை அறிவாட்சித்தரம் என அழைக்கப்படுகின்றது?

அறிவு + ஆட்சி + தரம் = அறிவாட்சித்தரம். மனிதன் புலன்களுக்கு அடிமையாகாமல் அறிவை ஆட்சி செய்ய விட வேண்டும். மனம் போன போக்கெல்லாம் அறிவு போகக்கூடாது. எப்போதும் அறிவு ஆட்சி செய்ய வேண்டும். குண்டலினி யோகத்தை இராஜயோகம் என்றும் கூறுவர். இராஜயோகம் பயில்வதே அறிவை ராஜாவாக செயல்பட வைப்பதற்காகத்தான். இத்தகைய திறமையுள்ள தன்மையைக் கொண்ட மனிதனிடம் அறிவு ஆட்சி செய்கின்றது எனலாம்.

எந்த அளவிற்கு ஒருவரின் அறிவு அயரா விழிப்பு நிலையோடு விளைவறிந்து செயல்புரிகின்றதோ அந்த அளவிற்கு அவருடைய அறிவு ஆட்சி செய்யும் தரம் உயர்ந்திருக்கின்றது என்று பொருள். மயக்க நிலையில் இருந்து கொண்டு புலன்களுக்கு அடிமையாகி விளைவறியாது, அறிவு செயல்கள் புரிந்தால் அந்த அளவிற்கு, அந்த மனிதருடைய அறிவு ஆட்சி செய்யும் தரம் குறைந்திருக்கின்றது என்று கொள்ள வேண்டும். மனிதனின் தன்மை அறிவு ஆட்சி செய்யும் திறத்தைப் பொருத்தது. அதனைக் கருத்தில் கொண்டுதான் மனிதனின் தரத்தையும் திறத்தையும் குறிப்பிட அறிவு ஆட்சி செய்யும் தரத்தைக்குறிப்பிட அறிவாட்சித்தரம் என்று அழைக்கிறார் மகரிஷி அவர்கள்.

வாழ்க அறிவுச் செல்வம்                                     வளர்க அறிவுச் செல்வம்