சிந்திக்க அமுத மொழிகள்- 86

வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

27-06-2015—சனி

நல்ல குழந்தைகளை உருவாக்கப் பெற்றோர்கள் நல்லவர்களாக வாழ வேண்டும்.
பெற்றோர்களின் வாழ்க்கையானது குழந்தைகளின் பாடப்புத்தகமாக அமைகிறது.

……. ஆர்னால்ட் பென்னட்.

பெற்றோர்கள் குழந்தைகளின் நிரந்தரமான ஆசிரியர்கள். அவர்களுக்கு விடுமுறையே கிடையாது.

……எம் கோர்க்கி.

பயிற்சி— 1) இவ்விரண்டு அறிஞர்கள் ஆதங்கப்படும் பெற்றோர்களுக்கு உதவக்கூடியக் கலை எது?
2) எப்போது அக்கலையை பயில ஆரம்பிக்க வேண்டும்? எப்போது முடிக்க வேண்டும்?
3) குழந்தைகளின் முதல் ஆசிரியர் யார்?

4)அறிஞர் எம். கோர்க்கி அவர்கள்  “பெற்றோர்களை நிரந்தரமான ஆசிரியர்கள் என்றும், அவர்களுக்கு விடுமுறையே கிடையாது என்றும்” கூறுவதன் மூலம் மனித குலத்திற்கு என்ன தெரிவிக்கிறார்?

 

 

வாழ்க அறிவுச் செல்வம்                              வளா்க அறிவுச் செல்வம்.