சிந்திக்க அமுத மொழிகள்- 79

வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

 

05-06-2015—வெள்ளி

                                    மூதூரை
”நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதும் நன்று.”                                   …… அவ்வையார்.

 

பயிற்சி— 1) இக்கவியில் கூறப்படும் நான்கும் எந்த நியதியின் கீழ் நன்மையைத் தருகின்றன?
2) அவ்வையாரின் இக்கவியின் பொருளுடன், மகரிஷி அவர்களின் கவியினை ஒப்பிட்டுப்பார்க்கவும்.
3) நல்லாரின் குணங்களை(சிறப்புக்களை) எடுத்துக் கூறுவது சிறந்த நன்மையைத் தரும். இதில் உள்ள விஞ்ஞானம் என்ன?

வாழ்க அறிவுச் செல்வம்                           வளா்க அறிவுச் செல்வம்