சிந்திக்க அமுத மொழிகள்-289

  1. Bharathiyar - Prosper Spritually

வாழ்க மனித அறிவு!                                                                  வளர்க மனித அறிவு!!

சிந்திக்க அமுத மொழிகள்-289

                                                                                                                      01-05-2020-வெள்ளி

         புலனில்  வாழ்க்கை இனியுண்டோ? நம்மி லந்த

         வாழ்க்கை இனியுண்டோ’’ 

. . . . .    மகா கவி பாரதியார்.

பயிற்சி:

  1. என்ன கூறுகின்றார் மகா கவி பாரதியார்?
  2. இந்த அமுத மொழியினைக் கண்ணுறும்போது நமது சிந்தனை எங்கு செல்கின்றது?
  3. புலனில் வாழ்க்கை என்றால் என்ன பொருள்?
  4. இனியுண்டோ என்பதனால் புலனில் வாழ்க்கை விரும்பத்தக்கதல்ல என்றுதானே கூறுகிறார் மகா கவி? புலனில் வாழ்க்கையால் துன்பம் என்கிறார்தானே?
  5. அப்படியானால் எந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்கிறார்?
  6. பாரதியாருக்கு 19 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவதரித்த ஐயன் திருவள்ளுவர் புலனில் வாழ்க்கையின் தொடர்பாக என்ன கூறியுள்ளார்?
  7. திருவள்ளுவர் புலன் வழி வாழ்க்கையைப் பற்றி கூறி 19 நூற்றாண்டுகள் கடந்தும்  மக்கள் மாறினார் இல்லை என்பதால்  மகா கவி பாரதியாரும் புலன் வழி வாழ்க்கையைப் பற்றி கூறுகிறார்?   
  8. மேலும் கூறுகிறார் “நம்மில் புலனில் வாழ்க்கை இனி இருக்குமா? என வினவுகிறார்?
  9. இதனைக் கூறி ஒரு நூற்றாண்டு ஆகின்றது? அவர் கூறிய புலனில் வாழ்க்கை இன்னமும் நடக்கின்றதா? இல்லை மாறிவிட்டதா சமுதாயம்?
  10. புலன்கள் ஐந்து இருக்கின்றன. வாழ்வதற்குத்தானே அப்புலன்கள் உள்ளன!  புலனில் வாழ்க்கை கூடாது என்றால் எவ்வழி  வாழ்க்கை வாழ வேண்டும்?
  11. அவ்வழி வாழ்க்கைக்கு 21 நூற்றாண்டிலாவது ஏதாவது அறிகுறி தோன்றியுள்ளதா?
  12. இதற்கு இறைநேசச் செல்வர்கள், உலக நல ஆர்வலர்களின் பதில் என்ன?

                    வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

http://www.prosperspiritually.com/contact-us/

 வாழ்க அறிவுச் செல்வம்!                                                வளர்க அறிவுச் செல்வம்!!