சிந்திக்க அமுத மொழிகள்- 225

வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

 

28-10-2016 — வெள்ளி

“வாழ்வு என்பது சிந்தனையே!  நல்ல சிந்தனையே சிறந்த வாழ்க்கையாகும்”

. . . கீரீஸ் நாட்டுப் பழமொழி.

பயிற்சி—

1) என்ன சொல்கின்றது பழமொழி?
2) வாழ்வையும் சிந்தனையையும் ஒன்று எனக் கூறுகின்றது பழமொழி. இது எவ்வாறு?
3) நல்ல சிந்தனையால் வாழ்வு எவ்வாறு சிறப்பாக அமையும்?
4) ஆறாம் அறிவுடன் மனிதன் வாழ்வதால் சிந்தித்துதானே வாழ வேண்டும்? வாழ்வது என்பது நொடிக்கு நொடி நடந்து கொண்டுதான் இருக்கின்றது? அப்படியானால் சிந்திப்பவர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பர்?
5) ஏன் சிந்திப்பது கடினமாக உள்ளது மனிதனுக்கு? சிந்திப்பதற்கு பயிற்சி அவசியமா? பயிற்சி இல்லாமையால் சிந்திப்பது கடினமாக உள்ளதா?
6) சிந்திப்பதால் என்னென்ன உலகியல் லாபங்கள் உள்ளன?

வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்