சிந்திக்க அமுத மொழிகள்- 145

வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

22-01-2016 — வெள்ளி

அறிவு குறைவாயிருப்பதைவிட கவனமின்மை அதிகக் கெடுதலைச் செய்கிறது?

…. பெஞ்சமின் பிராங்ளின்

பயிற்சி—
1) இது எவ்வாறு சரியாக இருக்கும்?
2) நுண்மான் நுழைபுலன் திறமைக்கும் இப்பொன்மொழிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? சிந்தித்து உங்களுக்குள்ளாகவே பதில் கூறவும்.

வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

வாழ்க வளமுடன்.

23-01-2016 அன்று தைப்பூசத்திருநாள்.   வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட திருநாள் என்பதால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்தாக ‘வள்ளலார் அவர்கள் கடை விரித்தது விரித்ததுதான்’ என்கின்ற தலைப்பில் சிந்திக்க இருக்கிறோம்.

மேலும், அடுத்த அறிவிற்கு விருந்தில்(27-01-2016—புதன்) அவரிடம் அருள் வேண்டி வணங்கி மடல் வரைவோம்.

வாழ்க வளமுடன்.