C251-இனிதினும்  இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 2/?

 

இனிதினும்  இனிது அறிவினரைக் கனவிலும்

நனவிலும் காண்பதுதானே! 2/?

C251-FFC 

                        11-12-2016—ஞாயிறு

 

சென்ற விருந்தில்  ஏகாந்தம் இனிது, அதனினும் இனிது ஆதியைத் தொழுதல், மற்றும் அதனினும் இனிது அறிவினரைச் சேர்தல் பற்றியும் ஆராய்ந்தோம். இன்று அறிவுள்ளோரைக் கனவிலும், நனவிலும் காண்பது எல்லாவற்றையும் விட எவ்வாறு இனிதாக இருக்கின்றது என ஆராய இருக்கின்றோம்.

 4)  அறிவுள்ளோரைக்கனவிலும்நனவிலும்காண்பதுஅதனினும்இனிது:

     இனியவைகளில், அளவில்அதிகமானதும், நான்காவதுமானஇனிது என்பது,அறிவுள்ளோரைக் கனவிலும், நனவிலும் காண்பது என்கிறார் அவ்வையார்.இனிதினும் இனிது வரிசையில் அறிவுள்ளோரைக் காண்பதைக் கடைசியாகக் கூறுகிறார் அவ்வையார்.  இனியது எது என முருகன் அவ்வையாரிடம் கேட்டதற்கு நான்கோடு நிறுத்திவிட்டார் அவ்வையார்.  அப்படியானால் இதற்கும் மேலும் இம்மண்ணுலக வாழ்க்கையில் வேறு ஏதும் இனிதினும் இனிது இல்லை என்பதுதான்.  இனியது எது என்கின்ற கேள்விக்கு நான்கோடு பதில் நின்று விட்டது.  வேறு ஏதும் இனிதினும் இனிது இல்லாததால் இயற்கை/இறை நான்கோடு பதிலை நிறுத்தி விட்டது.

     அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பதே  இனிதினும் இனிதாகிவிடுமா? எவ்வாறு அது இனிதினும் இனிதாகின்றது? வாழ்நாள் முழுவதும், அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் கண்டு இனிதினும் இனிதை அனுபவிப்பதோடு முடிந்துவிடுவதுதானா வாழ்க்கை?  அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது என்பது மனிதனின் செயல்.  இயற்கையின் நீதியின்படி மனிதனுடைய செயலுக்கு அவனுடைய நோக்கம், திறமை, தொடர்பு கொள்ளும் பொருள், காலம், இடம்  ஆகிய ஐந்து காரணிகளைக் கொண்டு, உரிய விளைவு, உரிய நேரத்தில் வரும் என்பதால் இனிதினும் இனிது என்கின்ற விளைவோடு நின்று விடுகிறதா?   செயலுக்கு விளைவு உண்டு என்பது உண்மைதான் என்றாலும் ஒரு செயலுக்கு ஒரு விளைவு தான் என்று இயற்கை நீதி சொல்லவில்லையே.  ஒரு செயலுக்குத் தொடர் விளைவு இருக்கலாமன்றோ. ஒரு சில செயலுக்கு முதலில் ஒரு விளைவும், அத்துடன்அது முடிந்திடாமல், தொடா்ந்து வாழ்நாள் முழுவதும்கூட விளைவுகள் வரலாம்.

    இனிதினும் இனிதிற்கானத் தொடர் விளைவு என்னவாக இருக்கும்?

பிறவிப்பயனை அடைவதே.  பிறவிப்பயன் என்பது என்ன?  மனிதனாகப் பிறந்தவன், ஆறாம் அறிவுடையவனாக இருப்பதால் ஞானம் பெற வேண்டும்.  ஞானம் என்பது என்ன?  ஆறாம் அறிவின் தெளிவினிலும் தெளிந்த நிலை.  இதுதான் மனிதன் பிறவி எடுத்ததற்கான உச்ச கட்டப் பயன்.  யாரும் விரும்பிப் பிறப்பதில்லை.  வினைப்பயனை அனுபவிப்பதற்காக  பிறவி தோன்றிவிட்டது ஆன்மாவிற்கு. ஆகவே எவ்வாறு வாழ வேண்டுமோ அவ்வாறு வாழ்ந்து, மீண்டும் பிறவாதிருத்தலாகும்.  இதனை, அவ்வையார் கூறும் மற்றொரு கவி உறுதி செய்கிறது.

    “அரியது எது” எனக் கேட்ட முருகனுக்கு, அவ்வையார் கூறும் பதிலைப் பாருங்கள் !

அரியது எது?

அரியது கேட்கின் வரிவடி வேலோய் !

அரிதரிது! மானிடர் ஆதல் அரிது!

மானிட ராயினும் கூன், குருடு, செவிடு,

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது !

பேடு நீங்கிப் பிறந்த காலையும்,

ஞானமும், கல்வியும் நயத்தல் அரிது !

ஞானமும், கல்வியும் நயத்த காலையும்,

தானமும், தவமும், தான்செய்தல் அரிது !

தானமும், தவமும் தான்செய்பவர் ஆயின்

வானவர் நாடு வழிதிறந் திடுமே !

                                                       …. அவ்வையார்.

இப்பாடலின் விளக்கம், தானாகவே விளங்குவதாக உள்ளது.

1)   உயிருக்கு மனிதப் பிறவி கிடைப்பது அரிது தானே!  உயிர், ஓரறிவிலிருந்து ஐந்தறிவு வரை பல பிறவிகள் எடுத்த பிறகுதான் மனிதப் பிறவி கிடைத்துள்ளதால், மானிடராய்ப் பிறத்தல் அரிது என்கிறார் அவ்வையார்.

2)   அப்படியே மானுடப் பிறவி கிடைத்தாலும் உடலளவிலும், மனஅளவிலும் குறைபாடுகள் இல்லாமல் பிறப்பது அரிது என்கிறார்.

3)   அப்படியே குறைகள் நீங்கிப் பிறந்தாலும், ஞானத்தையும், கல்வியையும் விரும்புதல் அரிது.

4)   அப்படியே ஞானத்தையும், கல்வியையும் சிறப்பாக அடைந்தாலும், தானமும் தவமும் செய்வது அரிது.

5)    இப்படியாக எல்லா அரிதினையும் கடந்து வந்து, தானத்தையும் தவத்தையும் ஒருமனதாகச் செய்து வருவார்களானால், வானவர் நாடு வழியைத் திறக்கும்.  அதாவது வீடுபேறு கிட்டும் என்கிறார்.

அதாவது பிறவிப்பயன் கிட்டும். பிறவிப் பயன் என்பது இன்பத்திற்கெல்லாம் பெரிதானது. ஆகவே அறிவினரைச் சேர்தலும், அவரைக் கனவிலும் நினைவிலும் காண்பதும், வீடுபேறு கிட்டக்கூடிய பயனைத் தரும். வீடுபேறு, இறுதியான  (ultimate) இன்பத்தினைத் தருவதால் அது பேரின்பமாக கொள்ளப்படுகின்றது.  வீடுபேற்றைப் பெறுவதற்காக, அறிவை அறிந்த அறிவினத்தாரை சேர்தலும், அவரைக் கனவிலும் நினைவிலும் காண்பது, ஆரம்ப நிலையிலேயே  இனிதினும்    இனிதாகத்தானே

இருக்கும்.  இனிதினும் இனிதாக இருந்தால்தானே கடைசிவரை ஆன்மீகச் சாதகன் தொடா்ந்து பயிற்சியில் நீடித்துப் பயனைப் பெறமுடியும்.

    இப்போது, கனவிலும், நினைவிலும் என்பதற்கு வருவோம். அதாவது தூங்காமல்விழித்துக்கொண்டிருக்கும்போதும் (நினைவிலும்), தூங்கும்போதும்(கனவிலும்)  காண்பதுஇனிதுஎன்கிறார்அவ்வையார்.  இன்னும் நேரிடையாகச் சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் அறிவினருடன் சேர்தல்  என்பது சம்பிரதாயமாக இருக்கக்கூடாது என்கிறார்.  அறிவினருடன் சோ்ந்தமையின் அளவைக் கூறுகிறார்.  அறிவினருடன் சோ்ந்ததில் என்ன அளவு உள்ளது என ஐயம் எழலாம்.   அறிவினருடன் சேர்ந்தமையால் ஏற்படுகின்ற பிணைப்பில் ஏற்படும் ஆர்வமிகும் ஆர்வத்தைக் கூறுகிறார். அந்த ஆர்வமிகும் ஆர்வம் (intense desire) இல்லாவிடில் கனவிலும் நனவிலும் காண்பது என்பது  எவ்வாறுசாத்தியமாகும்?

     விழித்துக்கொண்டிருக்கும்போதுஅறிவுள்ளோரைகாண்பதுசாத்தியம்.  அறிவினர்களைநேரில்சந்திப்பதால்அவர்களைக்காண்பதுசாத்தியமாகின்றது.  அறிவினர்களைச்சந்திக்காதபோதும்  அவர்களைநினைவில்கொண்டுவந்துபார்க்கலாம். இதுசாத்தியமென்றாலும்,பெரும்பாலோருக்கு சாத்தியமாவதில்லை.  பெரும்பாலோருக்கு சாத்தியமாகி இருந்திருந்தால் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கீழ்கண்ட கவியினை எழுத வேண்டிய அவசியமே இருந்திராது.

FFC-70- image-சாதனையே அறநெறி

 

 

அதற்குக் காரணம், அவா்களின்கருமையத்திற்கும்அறிவினரின்கருமையத்திற்கும்ஈர்ப்புஇல்லாததேயாகும். அதாவது அறிவினர் கூறும் அறிவுரைகளுக்கும் பெரும்பாலோர்  பழகிய பழக்கத்திற்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருத்தலே காரணம். உதாரணத்திற்கு, காதலர்கள்காதலிக்கும்காலத்தில்நேரில்சந்திக்காவிட்டாலும்ஒருவரையொருவர்எப்போதும்நினைந்து

கொள்வதுசாத்தியமாகவில்லையா?  ஏனெனில்இருவரும்ஒருவரைஒருவா்காதலிக்கின்றனர்.  அதுபோல்அறிவினரைக்காதலிக்கவேண்டும்.  அந்தக் காதலில் சிலர்  உடலளவில்காதலிப்பதுபோன்றுஅன்றுகுரு-சீடர்காதல்.  குருவிற்குக்கீழ்படிதலும்,அவரின்போதனைகளைவிரும்புவதாகவும்இருக்கவேண்டும்குரு-சீடர்காதல்.  குருவின் அரிய பெருமைகளைப் போற்றி மகிழ வேண்டும்.  அறிவினர் பூதவுடலில் இருந்தால் அவரை அடிக்கடி நேரில் சந்திக்க விரும்ப வேண்டும்.  அறிவினர் பூதஉடல் இல்லை என்றால் அவரது வாழ்க்கைச் சரித்திரத்தை, அவர் எழுதிய நூல்களை ஆர்வத்துடன் வாசிக்க வேண்டும்.  சத்சங்கத்தில் மனமுவந்து கலந்து கொண்டு நல்லவைகளை ஆராய வேண்டும்.

சீடனுக்கும் அறிவினரான குருவிற்கும் இடையில் கருமைய ஈர்ப்பு காதல் இருந்தால் இது சாத்தியமாகும்.

எவ்வாறுகாதலர்கள்காதலிக்கும்காலத்தில்இரவிலும்,தூக்கத்திலும்நினைந்துகொள்வதும், கனவிலும்ஒருவரைஒருவா்காண்பதுசாத்தியமாகின்றதோ,அதுபோல்குரு-சீடர்பிணைப்பு  மலர்ந்துவிட்டால்கனவிலும்குருவைக்காண்பதுசாத்தியமாகி பிறவிப்பயனை அடைவது சாத்தியமாகும்.

இதுவரைஅவ்வையார் கூறிய நான்காவது இனிதாகிய அறிவினைரைக் கனவிலும் நினைவிலும் காண்பது எவ்வாறு சாத்தியம் என்றும் இனிதினும் இனிதாக இருக்கும் என ஆராய்ந்தோம். அடுத்த அறிவிற்கு விருந்தில் அறிஞர் திருமூலர், அறிவினரைச்சேர்தல் எந்தெந்த வகையில் இனிதாக இருக்கும் என்று கூறுவதனை அறிய இருக்கிறோம்.  ….தொடரும்.

வாழ்க அறிவுச் செல்வம்   வளர்க அறிவுச் செல்வம்