வேதாத்திரியம்ஒருபாரிஜாதமலர் 2/2

 வேதாத்திரியம்ஒருபாரிஜாதமலர் 2/2

FFC-8

 4-11-2014

                

 

மனித வாழ்வு முழுமை அடைவதற்கு, இத்தனை பிறவிகளில் ஏற்படாத தெளிவு இப்போது அறிவிற்கு அவசியமாகின்றது. இதனை அறிவு விரும்பிக் கொண்டிருக்கின்றது. ஆனால் மனிதன் அதனை அறியாமல், “மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்”; என்கின்ற அறிவுரை இருந்தும் மனம் போன போக்கெல்லாம் போய்க்; கொண்டு அல்லலுறுகிறான்.
மனிதன் விரும்புவதெல்லாம் எதுவாக இருக்க வேண்டும்? உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஆகிய ஐந்து வளங்களையும் மனிதன் விரும்புவதாக இருக்க வேண்டும். இவற்றில் முதல் நான்கு கிடைத்து விடலாம். ஐந்தாவது வளம் கிடைப்பதற்கு அறிவு மேம்பட வேண்டும். அந்த அறிவு மேம்பட, அறிவிற்கு சிந்தனை ஆற்றல் வளர வேண்டும். சிந்தனையை அறிவின் செல்வமாக்கிடவேண்டும்.
அதற்கு ‘வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்’ என்கின்ற எண்ண ஆதரவு (Slogan)கோருதலின் வாயிலாக மனித எண்ணங்களின் ஆதரவினைத் திரட்ட வேண்டும். பாரிஜாத மலர் விரும்பியதையெல்லாம் கொடுக்கும் என்பதுபோல், இயற்கைக்கு புறம்பாக இல்லாமல், நியாயமான, இறுதியாக மனிதன் விரும்ப வேண்டிய மெய்ஞ்ஞானத்தை அடைய, மனித அறிவு தெளிந்த நல்லறிவாவதற்கு வேண்டிய விருந்திற்கெல்லாம் விருந்தினை அளிக்க வல்லது வேதாத்திரியம்.
மனிதன் தன்னிடம் எழும் எல்லா ஐயங்களுக்கும், புரிதலையும் தெளிவையும் விரும்புவான். அந்த விரும்புதலை அள்ளித் தர வல்லதுதான் வேதாத்திரியம். ஆகவேதான் இதனை ஒரு பாரிஜாத மலர் என்கிறோம். விரும்பியதையெல்லாம் அளிக்கும் பாரிஜாத மலர் இன்று வேதாத்;;;திரியத்தின்; அருமை பெருமைகளைக் கூறி அறிவுத் தேனீக்களை ஈர்க்க, எடுத்துச் சொல்வதற்கு உவமையாக இருந்துள்ளதை நினைக்கும் போது உள்ளம் பூரிக்கின்றது. இப்போது வேதாத்;;;;;திரியம் மெய்ஞான மலராகிவிட்டது.
இதுவரை எத்தனையோ ஆன்மீக மலர்களை காலத்திற்கேற்ப மனித அறிவின் நிலைகளுக்கேற்ப இயற்கை மலரச்; செய்துள்ளது. ஆனால் இன்று பூக்களிலேயே சிறந்த பூவான, விரும்பியதைக் கொடுக்கும்; பாரிஜாத வேதாத்திரிய மலரை அளித்துள்ளது இயற்கையின் கருணையன்றோ. வேதாத்திரியத்தி;ல் என்னென்ன உள்ளன என்று கேட்பதைவிட, உங்களுக்கு எது தேவையோ அது இருக்கின்றதா என்று கேளுங்கள். இருக்கும். தட்டுங்கள் திறக்கப்படும். இது மிகையல்ல. வேதாத்திரிய பாரிஜாத மலரில் கிடைக்கும் ‘அறிவுத் தேன்’ நான்கு வகைகளில் கிடைக்கின்றன.
1) கடவுள் என்பவர் யார்? இயற்கை என்பது எது?
2) உயிர் என்பது என்ன?
3) இன்பதுன்பம் என்பது என்ன?
4) வறுமை ஏன் வருகின்றது?
ஆகிய நான்கு வினாக்களுக்கான விடைகளின் வாயிலாக, அறிவுத் தேனீக்கள் வேதாத்திரிய பாரிஜாத மலரிலுள்ள தேனை நான்கு வழிகளில் அருந்தலாம். இது தவிர வேறு எது மனிதஅறிவிற்குத் தேவையாக இருக்க முடியும்? இந்த நான்கும் மகோன்னத கேள்விகள். எனவே இந்த மகோன்னத கேள்விகளுக்குத் தெளிவைப் பெறுவது என்பது, இதுவரை அறிவு விரும்பியதன்றோ! இது வரை இது மறைமுக விரும்புதலாக (latent desire) இருந்து வந்தது. ஆகவேதான் வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர் என புகழ் ஏத்தி வணங்குகிறோம். வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.
மலர் என்று ஒன்று இருந்தால் அதிலுள்ள தேனை அருந்துவதற்காக தேனீக்கள் வந்து மொய்ப்பதை போன்று இன்று மலா்ந்துள்ள பாரிஜாத மலரான வேதாத்திரியத்தில் உள்ள அறிவுத் தேனை பருக அறிவுத் தேனீக்கள் ஏற்கனவே மொய்த்துக் கொள்ள ஆரம்பித்துவிட;டன. ஆகவே இதனை கண்ணுறும் அனைவரும் வேதாத்;திரி அறிவுத்தேனைப் பருக ஓடோடி வாருங்கள். அனுபவித்துவிட்டு மற்றவர்களையும் பாமர அறிவிலிருந்து அறிவுத்தேனீயாக்க வழியைக்காட்டி புண்ணியத்தைச் சேர்த்திடுங்கள்.
வாழ்க வேதாத்திரியம், வளர்க வேதாத்திரியம்;
வாழ்க மனித அறிவு, வளர்க மனித அறிவு.
வாழ்க அறிவுச் செல்வம், வளர்க அறிவுச் செல்வம்.
வாழ்க உலக மக்கள் அனைவரும்.
வாழ்க உலக அமைதி;. வருக உலக அமைதி விரைவில்.
*****