மனவளக்கலை ஓர் அறிவுச்சுரங்கம்

 

வாழ்க மனித அறிவு!                       வளர்க மனித அறிவு!!

lotus
மனவளக்கலை ஓர் அறிவுச்சுரங்கம்

FFC-282

11-03-2018-ஞாயிறு
உ.ச.ஆ. 11-03-33

Vethathiri_a_Living_Dictionary (2)
வாழ்க வளமுடன்!

தலைப்பு எதனைத் தெரிவிக்கின்றது? இயற்கை அன்னைக்கு/இறைக்கு நன்றியோடு தெரிவிக்கும் கருத்துரைத்தலாகும்(Feedback). மனவளக்கலை ஏன் சுரங்கத்தோடு ஒப்பிடப்படுகின்றது? சுரங்கம் என்பது என்ன என்று யாவரும் அறிவர். நிலக்கரிச் சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகின்றது. தங்கச்சுரங்கத்தில் தங்கம் வெட்டி எடுக்கப்படுகின்றது. அதுபோன்றா அறிவுச்சுரங்கத்தில் அறிவு எடுக்கப்படும்? தங்கமும், நிலக்கரியும் பருப்பொருளாக உள்ளதால் அவற்றை பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும். ஆனால் அறிவு அரூபமாயிற்றே! ஆனால் அறிவின் இருப்பிடம் அறிந்து கொள்ளமுடியும். அறிவை அறிய நினைந்துவிட்டால் அறிவை அறியும் வரை அறிவிற்கு ஓய்வு கிடையாது என்பார் அறிவின் அறிவியலில் முதல் அறிவியலாளரான வேதாத்திரி மகிரிஷி அவர்கள். அறிவு தன்னைப் பற்றி அறிய வேண்டிய அனைத்து வளங்களையும் உடையது மனவளக்கலை.

அறிவு முந்தையதா? அல்லது மனம் முந்தையதா? அறிவுதான் முந்தையது. மனதை வளமாக்கும் கலைக்கு மனவளக்கலை என பெயர் வைத்துள்ளார் மகரிஷி அவர்கள். அறிவுவளம் இயற்கையின் முதன்மை வளம். மனவளக்கலையில் அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற முடியும் என்பதால் மனவளக்கலை என்பது அறிவுச்சுரங்கம் ஆகின்றது. மனவளக்கலை அறிவுச்சுரங்கம் என்பதற்கு சான்று அறிவின் அறிவியலில் முதல் அறிவியலாளரைத் தந்துள்ளதே இதற்குச் சான்று. யார் அந்த முதல் அறிவியலாளர்? நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களே. மனவளக்கலையின் முதல் வெற்றியாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். மனவளக்கலை உருவாக்கியவரே வேதாத்திரி மகரிஷி அவர்கள். மனவளக்கலையின் தந்தையாக இருக்கும்போது வேதாத்திரி மகரிஷி அவர்களை மனவளக்கலையின் முதல் வெற்றியாளர் என்று எவ்வாறு கூறமுடியும் என்கின்ற ஐயம் எழலாம். தான் வழிமுறையாகச்(process) சென்று இறைஉணர்வு பெற்றதால் அதே வழிமுறையை அவ்வாறே நமக்கு சொல்லித் தரமுடிகின்றது என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அந்த வழிமுறைக்கு மகரிஷி அவர்கள் கொடுத்த பெயர்தான் மனவளக்கலை என்கின்ற அரிய கலை.

எனவே மனவளக்கலையின் முதல் வெற்றியாளர் மகரிஷி அவர்கள் என்பது சரிதானே?

மேலும் மகரிஷி அவர்கள் கூறுவது, இயற்கை தனக்குத் தெரிவிக்கின்றது. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கிணங்க, தனக்கு தெரிவித்ததை உலகநலன் கருதி சமுதாயத்திற்குத் தெரிவிக்கும் கருவியாக செயல்படுவதாகக் கூறுவார். ஆகவே, பொறுப்பாலும், கடமையாலும் உந்தப்பட்டு தனக்கு இயற்கை தெரிவித்ததை எல்லாம் ஒன்று விடாமல் இந்த சமுதாயத்திற்கு அவர் தெரிவித்ததுதான் திருவேதாத்திரியம். பூதஉடலை உதிர்ப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரும்கூட நூல் ஒன்றினை எழுதியுள்ளார்.

உணர்ச்சியாய் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று பல நாள் உணர்ந்திருந்ததை மேலும் உண்மை விளங்க உணர்ச்சிக்கு முன்னர் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும் இறையின் திருநிலையும் அறிவே என உணர்ந்ததாகக் கூறுகிறார். அறிவின் செயல்பாடுகளை ஏழாகக் கண்டுபிடித்துள்ளார்.

அறிவிச் செயல்பாடுகள்-TSS

இந்த கண்டுபிடிப்புதான் திருவேதாத்திரிய அறிவின் அறிவியலுக்கு மகுடம் சூட்டுகின்றது. அறிவே தெய்வம் என்று பல அருளாளர்கள் கூறியிருந்தாலும், அறிவே தெய்வம் என்கின்ற உண்மை வெட்டவெளிச்சமாகியது இருபதாம் நூற்றாண்டில்தான்(1911). அறிவு எவ்வாறு தெய்வம் என்பதனையும், அறிவின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால சரித்திரத்தையும் (past, present and future history of Nature/God) தெரிவிக்கின்றது திருவேதாத்திரியம்.அறிவின் இருப்பிடத்தைத் தெரிவிக்கின்றது. அதுவே இறைநிலை என்றும், அறிவின் இருப்பிடம் அறிந்தால் இன்பமுறலாம் என அன்பு வேண்டுகோள் விடுக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

அன்பர்களே வாரீர்’  என அழைப்பு விடுக்கின்றார்.

அன்பர்களே வாரீர்-TSS-

ஆகவே அவரது அழைப்பை ஏற்று மனவளக்கலை பயில்வோம். மனவளக்கலை அறிவுச்சுரங்கத்தில் அறிவு அறிய வேண்டியதை எல்லாம் கருத்தியலாகவும், செயல்முறையாகவும் பெற்று ‘அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை, அது முக்தி’ என்பதற்கினங்க அறிவு முழுமை பெறுவோம்.

வாழ்க மனவளக்கலை!        வளர்க மனவளக்கலை!!

வாழ்க அறிவுச் செல்வம்                               வளர்க அறிவுச் செல்வம்