சி.கு-சீ-உ-.எண்- 04-01

• குறிப்பு: முகப்பிலுள்ள இப்பயிற்சியின் நோக்கத்தை வாசிக்காதவர்களின் வசதிக்காக, இப்பயிற்சிக்குள் செல்லும் முன் இப்பயிற்சியின் நோக்கத்தை அறிந்து விட்டு பயிற்சிக்குள் செல்வதற்காக மீண்டும் இப்பயிற்சியின் நோக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நோக்கத்தை முகப்பில் வாசித்தவர்கள் நேரிடையாக பயிற்சிக்குள் செல்லலாம். வாழ்க வளமுடன்.

மூன்று வகையான சிந்தனைப் பயிற்சியின் நோக்கங்களை தனித்தனியாக இதுவரைப் பார்த்தோம். இப்போது நான்காவதான குரு – சீடர் உரையாடல் என்கின்ற சிந்தனைப் பயிற்சியின் நோக்கத்தை அறிவோம். தழிழ் இலக்கியம் இயல், இசை. நாடகம் ஆகிய மூன்றைக் கொண்டது. இப்போது . மூன்றாவதான நாடக வடிவில் இந்த பயிற்சி அமையும். ஆகவே இணைய சத்சங்கம். இயல், இசை. நாடகம் ஆகிய மூன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாடகம் என்பது என்ன? சமுதாய நலன் கருதி சொல்லவேண்டியக் கருத்தை நாடக வடிவில் எடுத்துக் கூறப்படும். நாடகத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்கள் நடிப்பார்கள். சொல்ல வேண்டியக் கருத்தை நேரிடையாகச் சொன்னால் புரியாமல் போகலாம். ஆகவே அக்கருத்தை நாடக வடிவில் சொல்லப்படுகின்றது. மகாத்மா காந்தி அடிகள் சிறு வயதில், அரிச்சந்திரன் நாடகம் பார்த்துவிட்டுத்தானே உண்மையே பேசவேண்டும் என்கின்ற உறுதி பூண்டார். நாடகம் தானே அவரை உண்மையைப் பேசுவதற்குத் தூண்டி விட்டது.

ஒரு பொருளைப் பற்றி நேரிடையாகக் கூறுவதற்கு அதிக நேரம் தேவையில்லை. ஆனால் நாடக வடிவில் காட்சிப் படுத்திக் கூறும் போது நாடகம் முடிந்த பிறகும், அது மனதில் நின்று சிந்திக்கச் செய்யும். குரு – சீடர் உரையாடல் பயிற்சியில் இரண்டு பாத்திரங்களே உள்ளனர். குரு மற்றும் சீடர். குருவிடம் மாணவன் ஒரு பொருள் பற்றி அறிந்து கொள்ள கேள்விகளைக் கேட்பார். குரு அதற்குப் பதில் சொல்வார். சீடர் அறிய வந்த பொருள் பற்றி அவரது ஐயங்களைப் பல கேள்விகளாகக் கேட்பார். குருவும் சீடரின் நிலை அறிந்து பதில் கூறுவார், சீடருக்கு முற்றிலுமாக ஐயமின்றி அறியவந்த பொருள் பற்றி அறியும் வரை குரு – சீடர் நாடகம் தொடரும். சீடர் அறிய வந்த பொருள் அறிந்ததும் நாடகம் முடிவுறும்.

பயிற்சிக்குள் செல்வோம் நாள் 28-10-2014

குரு- சீடர் உரையாடல்

தலைப்பு—உயிர்.

சீடர்: வணக்கம் ஐயா.
குரு: வா. உட்கார். நலமாக இருக்கிறாயா? என்ன சந்தேகம் உனக்கு இன்றைக்கு?
சீடர்: உயிர் என்பது என்ன?
குரு: உயிர் என்பது ஆற்றல்.
சீடர்: ஆற்றல் என்றால் என்ன?
குரு: ஆற்றல் என்பது சக்தி. ஆங்கிலத்தில் Energy என்று பெயர்.
சீடர்: எதற்கு ஆற்றல் வேண்டும்?
குரு: உடல் ஓர் இயந்திரம். இயந்திரம் இயங்குவதற்கு ஆற்றல் தேவையல்லவா? மாவு அரைக்கும் இயந்திரத்திற்கு மின்சாரம் தேவையில்லையா? அது போல் உடலாகிய இயந்திரம் இயங்க ஆற்றல் தேவை. அந்த ஆற்றலைத் தருவது உயிர் தான். எனவே தான் உயிரை ஆற்றல் என்கிறோம்.
சீடர்: உடலை ஏன் இயந்திரம் என்கீறிர்கள் குருவே!
குரு: உடலுக்குள் பல உறுப்புகள் இருக்கின்றன. அவை தானாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதேபோன்று கைகள், கால்கள், கண், மூக்கு, காது, வாய், நாக்கு ஆகிய வெளி உறுப்புகள் இருக்கின்றன. எல்லா உறுப்புகளும் இயங்கி மனிதன் தன் பணியைச் செய்வதால் உடலை இயந்திரம் என்கிறோம்.

…..தொடரும்