சிந்திக்க வினாக்கள்-72

வாழ்க மனித அறிவு                                                         வளர்க மனித அறிவு

14-05-2015— வியாழன்

 

எதிர்பார்த்தல் எப்போதும் ஏமாற்றம் தான் இருக்குமே தவிர, எதிர்பார்த்த அளவிலே கிட்டாது என்கிறார் மகரிஷி அவர்கள். எதிர் பார்த்தலில் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் நான்கு பரிமாணங்கள் என்னென்ன?

 

வாழ்க அறிவுச் செல்வம்                               வளர்க அறிவுச் செல்வம்

 

விடை

சிந்திக்க வினாக்கள்-71

11-05-2015— திங்கள்

1) எப்போதும் விழிப்போடும், சிந்தனை யோடும் ஆற்றும் செயல்களினால் முன் வினையின்
தீமைகள் தடுக்கப்படும். …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

2) மனம், உயிர், மெய்ப்பொருள் என்ற மறைபொருட்களை விளங்கிக் கொள்வதற்கு ஏற்ற ஓர் ஆற்றலை    அறிவு பெற்றிருக்கும் சிறப்பு நிலைக்குத்தான்        ஆறாவது அறிவு          என்று பெயர். …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க அறிவுச் செல்வம்                                   வளர்க அறிவுச் செல்வம்