சிந்திக்க வினாக்கள்-70

வாழ்க மனித அறிவு          வளர்க மனித அறிவு

 

07-05-2015— வியாழன்

வாழ்க வளமுடன்!

 

அறிவாட்சித் தரம் என்பது என்ன?  ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றது?

 

வாழ்க அறிவுச் செல்வம்               வளர்க அறிவுச் செல்வம்

விடை

சிந்திக்க வினாக்கள்-69

 

04-05-2015— திங்கள்

வாழ்க வளமுடன்!

அறிவின் பருவங்களாக மகரிஷி அவர்கள் கூறும் ஐந்து என்னென்ன?

1) மனிதனாகப் பிறந்தும் கூட தான் மனிதன் என்று அறிந்து கொள் முடியாத பருவம் முதல் பருவம்.
2) இரண்டாவது பருவம்: – தான் மனிதன் என்று அறிந்தும், மனிதனாக நடந்து கொள்ளத் தெரியாத பருவம்
3) மூன்றாவது பருவம்: – மனிதனாக வாழத் தெரிந்தும், அதுவரையில் அறியாமையால் வாழ்ந்த பழக்கங்களிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளத் தெரியாமையால், உணர்ச்சி மற்றும் ஆராய்ச்சி ஆகிய இருவகை போராட்டங்களுக்கிடையே வாழ்வது.
4) நான்காவது பருவம்: – அறிவும் செயல்களும் ஒன்றுபட்டு மனிதன் மனிதானாகவே வாழ்வது.
5) ஐந்தாவது பருவம்: – தான் நெறியோடு வாழ்ந்தும், தெளிவற்றவர்களால் தனக்கும், சமுதாயத்திற்கும் விளையும் தீமைகளை நீக்கி, தன்னைப் போல் உலக மக்கள் அனைவரும் நெறியுணர்ந்து வாழும் சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று முனைந்து செயலாற்றுவது.

 ……..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

குறிப்பு: – உலக மக்களை, அறிவின் ஐந்தாவது பருவத்திற்கு உயர்த்தவே இயற்கை கருணையோடு அளித்துள்ளதுதான் திருவேதாத்திரியம். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.