சிந்திக்க வினாக்கள்- 319

வாழ்க மனித அறிவு!                 வளர்க மனித அறிவு!!

lotus

 

சிந்திக்க வினாக்கள்- 319

03.08-2020 – திங்கள்

 

 

பிராயச்சித்தம்

பயிற்சி:

 1. பிராயச்சித்தம் என்றால் என்ன?
 2. பழிச்செயல் புரியும் மனிதனால்,  பிராயச்சித்தம்   நடைமுறையில் தவறாமல் செய்யப்படுகின்றதா?
 3. இல்லையெனில் ஏன்?  பிராயச்சித்தம் எளிமையாகத் தானே உள்ளது!
 4. பிராயச்சித்தம் எந்தெந்த முறைகளில் செய்யலாம்?
 5. அவற்றில் எந்த முறையில் பிராயச்சித்தம் செய்வதற்கு மனம் ஒத்துழைப்பு தருவதில்லை? ஏன்?  பிராயச்சித்தம் செய்யாதபோது அதுவே மற்றொரு பழிச்செயல் புரிவதாகிவிடாதா?
 6. பிராயச்சித்தம் செய்யவில்லை எனில் அதன் விளைவு என்ன?  செய்தால் அதன் பயன்  என்ன?
 7. ஆறாம் அறிவின் சிறப்புகளில் ஒன்று அதன்  ‘ Logic – ஏரணம்’ – அறிவு அடிப்படையில் ஏற்கும் உண்மை). அப்படியிருக்கும்போது பிராயச்சித்தம் செய்வதில் என்ன தயக்கம் மனிதனுக்கு?   
 8. தனக்கு பிறரால் பழிச்செயல் ஏற்படும்போது அவரிடமிருந்து  பிராயச்சித்தம் எதிர்பார்க்கும் மனிதன்,   தான் பிறர்க்கு பழிச்செயல் புரிந்தபோது மட்டும்  பிராயச்சித்தம் ஏன் செய்வதில்லை/தயங்குகிறான்?  Is it logic for the consciousness?   Is illogical behaviour of consciousness corrcct?  அது மனிதனின் பண்பா?
 9. கர்மாக்கள் எத்தனை வகைப்படுகின்றன? பிராயச்சித்தத்தால் எந்த கர்மாவின் தீய விளைவைப் போக்க முடியும்?  அவ்வளவு துல்லியமாக பிராயச்சித்தங்கள்  செய்ய வேண்டுமா?
 10. முன்னோர்கள் வழியாக வந்த கர்மாவின் தீய விளைவுகளை பிராயச்சித்தத்தால் தவிர்க்க முடியுமா? 
 11. முடியாது என்றால் அதற்கான காரணம் என்ன?
 12. முடியாதபோது முன்னோர்கள் வழியாக வந்த கர்மாவை எவ்வாறு  போக்குவது? 

வாழ்க வளமுடன்!

அறிவிப்பு:

வரும் 06.08.2020 அன்று வியாழக்கிழமை, சிந்திக்க வினாக்கள் பகுதியில் ‘பாராட்டு’ குறித்த வினாக்களை சிந்திக்க இருக்கின்றோம்.

வாழ்க வளமுடன்!

 

வாழ்க அறிவுச் செல்வம்!                              வளர்க அறிவுச் செல்வம்!!