சிந்திக்க வினாக்கள் – 306

வாழ்க மனித அறிவு!                                                               வளர்க மனித அறிவு!!

சிந்திக்க வினாக்கள் – 306

                                                                                                                                                                        21.06.2020 –  ஞாயிறு.

6 ஆவது சர்வதேச யோகா தினம்:  21.06.2020.

 

வாழ்க சர்வதேச யோகா தினம்!    வளர்க சர்வதேச யோகா தினம்!
வாழ்க சர்வதேச யோகா தினம்!     வளர்க சர்வதேச யோகா தினம்!
வாழ்க சர்வதேச யோகா தினம்!     வளர்க சர்வதேச யோகா தினம்!

 

வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!

 

வினா: திருவேதாத்திரியம் உலக மக்களுக்கு என்னென்ன அளித்துக்கொண்டிருக்கிறது? 

விடை:

1)    உடல் நலத்திற்கு,  மனவளத்திற்கு,  மனிதனுக்கும் இறைக்கும் புனித இணைப்பினை(Yoga is bridging Jeevathma and Paramathma) ஏற்படுத்துவதற்கு மனவளக்கலை யோகாவை அளிக்கின்றது. 

2)    உடல் நலத்திற்கு எளியமுறை உடற்பயிற்சி அளிக்கின்றது.

3)    முதுமையைத் தள்ளிப்போடுவதற்கு காயகல்ப பயிற்சியிளை அளிக்கி்ன்றது.

4)    மனவளத்திற்கு தவப்பயிற்சியினை அளிக்கி்ன்றது.

5)    மனிதனின் தரத்தை உயர்த்தும் தெய்வீகப் பயிற்சியான தற்சோதனை அளிக்கின்றது.

6)   அறிவின் இருப்பிடத்தை தெரிவிக்கின்றது.

7)   அறிவின் பயணத்தை, தன்மாற்றத்தைத் தெரிவிக்கின்றது.

8)   அறிவின் இயக்கத்தைத் தெரிவிக்கின்றது.

9)    துணிந்து தெய்வம் அரூபமான வெட்டவெளி என்கின்றது.

10)   வெட்டவெளி சக்தியில்லையானால் வேறு எந்தப்பொருள் வலிது என வினா எழுப்பியுள்ளது.

11)   வெட்ட வெளி ஒன்றுமில்லாதது என நினைக்கப்படும் நிலையில் வெட்டவெளிக்கு தரங்களையும், திறன்களையும் கூறுகின்றது.

12)   ‘துணிந்துரைப்போம் அறிவே தெய்வம்’ என்கின்றது.

13)   ஆன்மீகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் இணைத்துள்ளது.

14)   வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றது.

15)  ஒழுக்கம் உயிரைவிட மேலானது என்பதனை வலியுறுத்தி செயல்படுத்துவதற்கு இரண்டொழுக்கப் பண்பாட்டினைத் தந்துள்ளது.

16)  ஒழுக்கம் பழக்கமாகிட, கல்வியில் ஒரு அங்கமாக ஒழுக்கப்பழக்கறிவை சேர்த்துள்ளது.

17)  உயர் புகழ் அளிக்கக் கூடிய தொண்டிற்கு நல்வாய்ப்பினை அளித்துள்ளது.

18)  அறிவு தனது பூர்வீகச் சொத்தான அமைதியினை அனுபவிக்க மனவளக்கலைலைய வடிவமைத்துள்ளது.

19)  உலக சமாதானத்திட்டங்களை அளித்துள்ளது.

20)  சமுதாயச் சிக்கல்களை எடுத்துரைத்து, அதற்கான தீர்வுகளைக் கூறுகின்றது.

21)  தனிமனிதன், சமுதாயம், இயற்கை ஆகிய மூன்றிணைப்பைக் கருத்தில் கொண்டு ஆலோசனைகளைக் கூறுகின்றது.

22)  போரில்லா நல்லுலகத்திற்கு வழிகாட்டுகின்றது.

23)  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கின்ற உண்மையை எடுத்துரைக்கின்றது.

24)  ஒன்றே பலவாகியது என்கின்ற ஒருமை இயலைத் தந்துள்ளது.

25)  தனிமனிதனையும் உலகையும் உய்வித்து வாழவைக்கும் ‘வாழ்க வையகம். வாழ்க வளமுடன்’ என்கின்ற தாரக மந்திரத்தை அருளியுள்ளது.

26)  மனிதன் சிந்தனையை வளர்த்துக் கொண்டிருக்கின்றது

27)  மனிதனின் அறிவாட்சித்தரத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றது.

   இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். திருவேதாத்திரியம், Infiniteஎல்லையற்றதைப் பற்றிய விஞ்ஞானத்தைத் தருவதால்,      திருவேதாத்திரியத்தில் என்னென்ன கூறப்பட்டிருக்கின்றன எனக் கேட்டால் பட்டியல் எல்லையற்று நீண்டு கொண்டே போகும் என்பதால்,    அதற்கு பதிலாக, ஒன்றைக் குறிப்பிட்டு ‘இது பற்றி ஏதாவது கூறப்பட்டிருக்கின்றதா’ எனக் கேட்டால்,    ‘இருக்கின்றது’ என்கின்ற பதிலைத்தரும் எடுக்க, எடுக்க, அள்ள, அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக திகழ்கின்றது திருவேதாத்திரியம். ஏனெனில் பிரபஞ்ச களத்தில் பிறந்தது திருவேதாத்திரியம். தாய்த்திரு நாட்டின் புகழைக்கூறும் ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்’ என்கின்ற திரைப்பாடல் வரியைப் போன்று என்ன வளம் இல்லை, இந்த மனவளத்தைப் பெருக்கும் மனவளக்கலை அருளியுள்ள இந்த திருவேதாத்திரியத்தில்’ என மகிழ்ச்சி பொங்கவே கூறுவர், ஐயமின்றி, இறையும்-மனமும் ஒன்றுபட்ட லட்சோப லட்ச பயனாளிகளான மனவளக்கலைஞர்கள்.

 வாழ்க திருவேதாத்திரியம்!   வளர்க திருவேதாத்திரியம்!!

வாழ்க வையகம்!              வாழ்க வளமுடன்!!