சிந்திக்க வினாக்கள் – 307

வாழ்க மனித அறிவு!                                                               வளர்க மனித அறிவு!!

சிந்திக்க வினாக்கள் – 307

                                                                                                                                                                     

                                            22-06-2020 – திங்கள்

 

அயராவிழிப்புணர்வு

 பயிற்சி:

 1. விழிப்பு’ என்றால் என்ன?
 2.  ‘உணர்வு’ என்றால் என்ன?
 3.  ‘விழிப்பு’ ’உணர்வு’ என்கின்ற இரு சொற்களையும் சேர்த்து ‘விழிப்புணர்வு’ என்று கூறுவதன் பொருள் என்ன?
 4.  விழிப்புணர்வை வகைப் படுத்த முடியுமா? முடியும் என்றால் எத்தனையாக வகைபடுத்தலாம்?
 5. அலட்சியம், உணர்ச்சிவயம் எவ்வகை விழிப்புணர்வைச் சேர்ந்தவை எனலாம்?
 6. அயர்’ என்கின்ற சொல்லின்  பொருள் என்ன?  ‘விழிப்புணர்வு’, ‘அயரா’ என்கின்ற இரு சொற்களைச் சேர்த்து அயரா ‘விழிப்புணர்வு’  என்கின்றபோது அதன் பொருள் என்ன?
 7.  விழிப்புணர்வு மனிதனுக்கு அவசியமா? எந்தவகை விழிப்புணர்வு அவசியம்? ஏன் அவசியம்?
 8.  பேராசை, சினம், கவலை எந்தவகை விழிப்புணர்வைச் சேர்ந்தவை?
 9. AWARENESS is GOD’ என்கின்றன சில ஆங்கில ஆன்மீக நூல்கள். இதற்கு நீங்கள் உடன்படுகீறீர்களா?  ஆம் என்றால் எப்படி?
 10.  விழிப்புணர்வு அயர்ந்துவிட்டால் ஏற்படுவது நன்மையாக இருக்குமா?
 11.  செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற பிரதான உண்மையில் ‘விளைவறிந்த விழிப்பு நிலை’ எனப்படுவது அயரா விழிப்புணர்வாகுமா?
 12.  ஞானமும் அயராவிழிப்புணர்வும் இரண்டும் ஒன்றா? அல்லது வெவ்வேறா? ஒன்று எனில் எப்படி ஒன்றாகும்?
 13.  அயரா விழிப்புணர்விற்கு அடிப்படையான, அவசியமான மனிதத்தன்மைகள்/குணங்கள் என்னென்ன? அவற்றில் முதன்மை வகிப்பதை சொல்ல முடியுமா?
 14.  நுண்மாண் நுழைபுலனிற்கு அயரா விழிப்புணர்விற்கும் தொடர்பு உண்டா? உண்டு எனில் என்ன தொடர்பு அது?
 15.  அயராவிழிப்புணர்வு யாருக்கு/எதற்கு இருக்க வேண்டும்?
 16.  இப்பிரபஞ்சத்தில் எது அயரா விழிப்புணர்வோடு இருக்கின்றது? இருக்க முடியும்? மனிதனில் எது அயரா விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்? ஏன்?
 17.  எந்த நிலை அயரா விழிப்பு நிலை?
 18. எந்த ஒன்று மனிதனில் அயராவிழிப்புணர்வோடு இருந்தால் அவர் பிரம்மஞானியாவார்?

   

     குறிப்பு:

    அன்புடையீர்!

                               வாழ்க வளமுடன்! 

 • அயரா விழிப்புணர்வு பொருள் பற்றி சிந்திப்பதற்கு 18 வினாக்கள் மட்டுமில்லை, இதற்கு மேலும் இருக்கின்றன. 
 • ஒவ்வொரு வினாக்களிலும் துணை வினாக்கள் மறைந்து இருக்கலாம்/இருக்கின்றன.  (இப்பயிற்சி வினாக்களில்  மட்டுமில்லை.  ஞானிகளின் அருளுரைகளிலும், அருள் உரைநடைகளிலும், கவிகளிலும்     வரிகளுக்கு இடையே வரிகள் (hidden lines in between lines) மறைந்திருக்கலாம்;  இருக்கும். எனவே வரிகளுக்கு இடையேயும் வாசிக்க வேண்டும்(We must read in between lines)  வாசிக்கும்போதே அவற்றையும் சேர்த்துப் படித்து பொருள் தெரிந்துகொண்டு  மகிழவேண்டும். மகிழ்வது மட்டுமல்ல தெளிவிலும் தெளிவு பெறவேண்டும்.    We must be agile in understanding the theory of Gnanis’ (particularly Sri Vethathri Maharishi)  writings/findings. Please remember  the agility you have in solving the simultaneous equation in Maths in Schools and derivations. The agility may be again used here also.
 •  பயிற்சியின்போது அந்த துணை வினாக்கள் உங்கட்குள் உதிக்குமானால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழலாம்.
 • பிறர்க்கு எடுத்தும் கூறலாம். அதுவே அறிவுத் தொண்டாகும். வினைகள் தீர்வதற்குள்ள பல வழிகளில்/பயிற்சிகளில் ஒன்று நம் குருநாதர் போன்று தொண்டுகளில் அவசியமான, சிறப்பானதான தன்முனைப்பில்லா அறிவுத்தொண்டு செய்து உலகநலத்தொண்டராக  திகழ்வதாகும்.
 • திருவேதாத்திரியம் செழிப்புடன் வளர்வதற்கு ஒவ்வொரு பயிற்சியாளரின் சிந்தனைச்செல்வமும் வளரவேண்டும்; சொல்லொனா அளவிற்கு வளர்ச்சி அடைய வேண்டும்.

       வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

          

    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

https://prosperspiritually.com/contact-us/

       வாழ்க அறிவுச் செல்வம்!   வளர்க அறிவுச் செல்வம்!!