சிந்திக்க கவிகள்-7

   வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

சிந்திக்க கவிகள்-7

06-05-2020-புதன்

அறக்கல்வி

சாதனையே அறநெறி(21-12-1961)

அறநெறியை போதிக்கப் புதிய நூல்கள்

அவசியமே இல்லைஇனி: மேலும் மேலும்

அறநூல்கள் எத்தனையோ இந்நாள் மட்டும்

அறிஞர்பலர் அளித்துள்ளார்; அவையே போதும்

அறம்பிறழா நெறிநின்று,  மக்கள் வாழ

அவசியமாம் பொருட்களொடு கல்வி கிட்ட,

அறவோரே திட்டமிட்டு அமுல் செய்வீரே!

அதன் மூலம் அறம் வளரும்; உலகம் உய்யும்.  .. ஞா.க.க.எண். 533

                                                            . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  

            

    பயிற்சி:

  • என்ன கூறுகின்றார் மகரிஷி அவர்கள்?
  • அறநெறியை போதிக்கப் புதிய நூல்கள் இனி  அவசியம் இல்லை என ஏன் கூறுகிறார்?
  • சாதனையே அறநெறி என்றால் என்ன?
  • அறம் பிறழாமல் மக்கள் வாழ்வதற்கு என்ன தீர்வுகள் கூறுகின்றார்?
  • அவசியமாம் பொருட்கள் கிட்டுவது ஒரு தீர்வாகக் கூறுகிறார்.  அதன் பொருள் என்ன?
  • கல்வி வேண்டும் என்கிறார். அந்த கல்வி என்ன? அக்கல்வி எப்போது ஆரம்பிக்க வேண்டும்?
  • கல்வியால் மட்டுமேவா அறத்தை சாதனைக்கு கொண்டுவர முடியும்?  அறத்தை சாதனைக்கு கொண்டு வர வேறு வழியில்லையா?
  • கல்வியால் அறத்தை சாதனைக்கு நிச்சயமாகக் கொண்டு வரமுடியும்  என்கின்றபோது, கல்வியைவிட வேறு சுலபமான, எளிதான,  வெற்றிகிடைக்கக் கூடிய வழி என்ன இருக்க முடியும்?   
  • நம் குருநாதர் வழியில் சிந்திப்போமே!  அவர் சிந்தனைக்கு எண்ணத்திற்கு வலு சேர்ப்போமே!                                                                                                                                      வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!