சிந்திக்க அமுத மொழிகள்- 90

வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

11-07-2015—சனி

 

மனிதனாகப் பிறந்த பிறகு பெருமை தரும் ஏதாவது செயலைத் செய்தே தீர வேண்டும். உலகைவிட்டு நீ செல்லும் நாளில் உலகம் உனக்காக அழ நீ சிரித்துக் கொண்டே செல்வாயாக.

…..சுவாமி விவேகானந்தர்.

பயிற்சி—
1) பெருமை தரும் செயல்கள் என்னென்ன?
2) எதற்காக உலகம் அழும்?
3) நம்மை சிரித்துக் கொண்டே செல்ல வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். எந்நிலையில் இருந்தால் அவர் கூறுவது போல் சிரித்துக் கொண்டே போக முடியும்?
4) நம் அனுமதியுடன்தான் உயிர் பிரிய வேண்டுமல்லவா? ஏன் அத்தகைய எண்ணம்?
5) இன்னும் ஏதாவது வினாக்கள் உங்களுக்கு எழுந்தால் எழுப்பி விடை காணுங்களேன். மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்களேன். உங்களுக்காகவே ஒரு சிறிய சத்சங்க வட்டம் அமைத்துக் கொள்ளுங்களேன்.
6) .இல்லையெனில், ஆன்ம செழிப்புறு இணைய தள சத்சங்கத்திற்கு கருத்துரைப்பகுதியின் வாயிலாக தெரிவிக்கலாமே! வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்