சிந்திக்க அமுத மொழிகள்- 81

வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

12-06-2015—வெள்ளி

 

“ செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்.”
                                                                                                               ….. அறிஞர். பெர்னார்டு ஷா
பயிற்சி— 1) அறிஞர் பொ்னார்டு ஷா என்ன அறிவுறுத்துகிறார்?

வாழ்க அறிவுச் செல்வம்                              வளா்க அறிவுச் செல்வம்

விடை

சிந்திக்கஅமுதமொழிகள்- 80           

    06-06-2015—சனி

 “அற்பருக்குஆண்டவன்அளித்தவரமேஅகம்பாவம்”  

–  அறிஞர். பர்ட்டன்புரூஸ்.                                                           

பயிற்சி -1) 

அகம்பாவம்உடையவரைஅற்பருடன்ஒப்பிடுகிறாரேஅறிஞா்பர்ட்டன்புரூஸ்.  இதுஎவ்வாறுசரி?

அறிஞர் பர்ட்டன் புரூஸ் கூறுவது சரியே. எவ்வாறு எனில் அகம்பாவம் என்பது தன்முனைப்பாகும். “அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை அது முக்தி” என்பதால். தன்முனைப்போ அல்லது அகம்பாவமோ இருந்தால் ‘அவன்,நான்,ஒன்று’ என்றுஅறியமுடியாது. ஆகவே  அறிவு முழுமை அடையாது குறையுடைய அறிவாகத்தான் இருக்கும்.  குறையுடையது அற்பம்எனப்படும்.  ஆகவே அறிஞர் பர்ட்டன் புரூஸ் குறை அறிவுடையவர் அகம்பாவம் உடையவராகிறார் என்கிறார்.

 பயிற்சி –  2)

மேலும் சிந்திக்கவும்.

 “அற்பருக்கு ஆண்டவன் அளித்த வரமே அகம்பாவம்” என்கின்ற கூற்றின் வழியாக அறிஞர் பர்ட்டன் புரூஸ் என்ன சொல்கிறார்? அற்பரைப்பற்றி கூறுகிறாரா? அல்லது அகம்பாவத்தைப் பற்றி கூறுகிறாரா?  அகம்பாவம்(அகங்காரம், தன்முனைப்பு) இருக்குமானால் அவன் குறையுடைய அற்பனாக இருப்பான். அந்த குறையுடைய சிற்றறிவு இறைவனை மறந்து, தன்னையே முன்னிறுத்தி,  உள்ளமாகிய அகம் தூய்மை கெட எண்ணுவது, பேசுவது, செயல்புரிவதுமாக இருந்தால் விளைவு துன்பம் தானே?!  ஆங்கிலத்தில் அகம்பாவம் EGO (Edging God Out) எனப்படுகின்றது. எனவே முழுமை அடையாத வரையில் அதாவது தெய்வநிலையை அறியாமலோ உணராமலோ இருப்பவருக்கு  அகம்பாவத்தை பரிசாகக் கொடுக்கிறார் இறைவன் என்று குறையுடையவரை (அற்பரை) ஏளனப்படுத்தி எச்சரிக்கிறார் அறிஞர் பர்ட்டன்புரூஸ்.

 மேலும் சிந்தித்தால்….

அளித்த வரம்’ என்றுதான் கூறுகிறார்.

அளிக்கும் வரம்’ என்று கூறவில்லை.

காரணம்:ஞானம் பெற்றவரைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே இறைவனை எப்போதும் நினைவில் கொண்டிருக்கும் அயராவிழிப்பு நிலையில் இல்லாமல்,  இறைவனை மறந்த நிலையில் இருப்பதால் ‘அளித்த வரம்’ எனச் சுட்டிக்காட்டுகிறார். எனவே அகம்பாவம் இருக்கும் வரையில் முழுமையடைய முடியாது என்பதனை தெளிவுபடுத்துகிறார் அறிஞர்.  வாழ்க வளமுடன்