சிந்திக்க அமுத மொழிகள்- 314

வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

 

சிந்திக்க அமுத மொழிகள்- 314

03.07.2020— வெள்ளி

 

“ஒழுக்கம் என்பது ஒருவனுடைய நெடுநாளைய பழக்கமாகும்”


– அறிஞர் ஜான் கிட்ஸ்

பயிற்சி:

  1. என்ன கூறுகிறார் அறிஞர் ஜான் கிட்ஸ் ?
  2. ஒழுக்கத்திற்கும் பழக்கத்திற்கும் என்ன உறவு?
  3. ஒழுக்கத்திற்கும் பழக்கத்திற்கும் உள்ள உறவு ஏன் நெடுநாளையது என்கிறார்?
  4. “இளமையில் கல்” என்கிறார் அவ்வைத்தாய் என்பதற்கும் கவிஞர் ஜான் கிட்ஸ் கூறுவதற்கும் பொருளில் இணக்கம் உள்ளதல்லவா? உள்ளது எனில் எவ்வாறு உள்ளது?
  5. ‘ஒழுக்கவாழ்விற்குபோராடவேண்டும்’ என்று அறிஞர் ரூஸோ கூறியதற்கும் அறிஞர் கிட்ஸ் கூறுவதற்கும் என்ன தொடர்பு?
  6. இரண்டொழுக்கப்பண்பாட்டினை வகுத்துக் கொடுத்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் பழக்கம் பற்றியும், விளக்கம் பற்றியும் கூறுவது என்ன?
  7. வேதாத்திரிய கல்வியின் நான்கு அம்சங்களில் ஒன்று ஒழுக்கப் பழக்க அறிவு என்பது சரிதானே?!  மனிதன் கல்வி கற்கும் பருவ ஆரம்பத்திலேயே கல்வியில் ஒழுக்கம் கற்றுக் கொடுக்கப்பட்டு  அது பழக்கப்பட வேண்டும் என்றல்லவா கூறுகின்றார்!
  8. “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்கின்ற ஆன்றோர் மொழி சரிதானே!
  9. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பது நினைவு கொள்ளத் தக்கது தானே?
  10. இருப்பினும் பல்லாயிரம் பிறவிகளில் செய்துள்ள பழிச் செயல் பதிவுகளை (தீயொழுக்கப் பதிவுகளை) ஒரு பிறவியிலேயே மாற்றி அமைக்கலாம் எனக் கூறும் பாடலை நினைவு கூறுவோம் இப்போது.

வாழ்க திருவேதாத்திரியம்!    வளர்க திருவேதாத்திரியம்!!

 

குறிப்பு: 

     அன்பர்களே வாழ்க வளமுடன்! 

இந்தப் பயிற்சியில் இதுவரை 10 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.  இவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்குள் எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழவும். சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும் நொடி தோறும் வளர்த்துக் கொள்ள அன்பு வேண்டுகோள்.  வாழ்க வளமுடன்!

வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!