சிந்திக்க அமுத மொழிகள்- 313

வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

 

சிந்திக்க அமுத மொழிகள்- 313

27.06.2020— சனி

நாம் துன்பத்தை வெறுக்கிறோம். ஆனால், இன்பம் எப்படி வருகிறது என்பதை ஆராய்வதில்லை. ஆராய்ந்தால்- உயிராற்றலைச் செலவு செய்துதான் இன்பம் அல்லது துன்பம் எனும் உணர்ச்சிகளைப் பெறுகிறோம் என்பது தெரியவரும்.

–  வேதாத்திரி மகரிஷி அவர்கள்

பயிற்சி:

  1. என்ன கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்? அருமையான கண்டுபிடிப்பு இல்லையா  இது?
  2. நமக்குத் தெரிந்தவரையில்  இன்பம் மற்றும் துன்பம் என்பன வேறு வேறு தானே?
  3. அப்படியிருக்கையில் இன்பம் எப்படி வருகின்றது என்ற மகரிஷி அவர்களின் ஆராய்ச்சி முடிவை அறியும்போது வியப்பும், கூடவே ஐயமும் ஏற்படுகின்றதல்லவா?
  4. இன்பத்திற்கு எதிரானது துன்பம். இன்பம் என்பதனை ஆராய்வதிலிருந்து இன்பத்திற்கு எதிரான துன்பம் வருவதையும்  அறியலாமோ? 
  5. இன்பம் துன்பம் எது என அறிந்து கொள்வதற்கு,  ‘இன்பம் துன்பம் இரண்டுக்குமே பொதுவானது உயிராற்றலின் செலவு’ என்ற ஒரு துப்பு (Clue) கிடைத்துள்ளது. இந்த துப்பை வைத்துக்கொண்டு மகரிஷி அவர்களின் சிந்தனாப் பள்ளியில் ஆரம்ப வகுப்பில் உள்ளவர்கள் இன்பம் துன்பம் என்பது என்ன என்று சுலபமாகக் கண்டுபிடிக்கலாமே!? முயலவும்.   வாழ்க வளமுடன்!
  6. கண்டுபிடித்து அதனை உறுதிப்படுத்த மகரிஷி அவர்கள் எந்த கவியின் வழியாக இந்த அருமையான கண்டுபிடிப்பைக் கூறுகிறார் எனவும் கூறவும்.
  7. மேலும் உரைநடையில் இன்பம் துன்பம் எப்படி வருகின்றது என்பதற்கு மகரிஷி கூறும் அவரவர் வாழ்க்கையில் அனுபவிக்கின்ற உதாரணங்களில் ஒன்றிரண்டைக் கூறவும்.

வாழ்க வேதாத்திரியம்! வளர்க வேதாத்திரியம்!!

 

குறிப்பு: 

     அன்பர்களே வாழ்க வளமுடன்! 

இந்தப் பயிற்சியில் இதுவரை 7 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.  இவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்குள் எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழவும். சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும் நொடி தோறும் வளர்த்துக் கொள்ள அன்பு வேண்டுகோள்.  வாழ்க வளமுடன்!

வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!