சிந்திக்க அமுத மொழிகள்- 06

வாழ்க மனித அறிவு                                                                                            வளர்க மனித அறிவு

 

17-11-2014

1)  இறைவனைத் தவிர மற்றவற்றில் மனம் செல்லும் பொழுது அவற்றின்

நிலையாமையை நினைவு கூர். இறைவனின் புனிதத் திருவடிகளில் சரண் அடைவாயாக.

. . . . .அன்னை சாரதா தேவியார்.

கருத்து- நிலையாமையை புரிந்து கொள்வதே ஞானம். நிலையாமையை நினைவில் கொண்டு வாழ்வது அயரா விழிப்பு நிலையில் வாழ்வது. ஞான ஒளியில் பிரகாசித்து வாழ்வதாகும்.

*****

வாழ்க அறிவுச் செல்வம்                               வளா்க அறிவுச் செல்வம்