59-ஏன், ‘அறிவே’, ‘தெய்வம்’ எனப்படுகின்றது?

*****
குறிப்பு: கடந்த அறிவிற்கு விருந்தில் கடைசியாக, கூடுதலாக, பிறகு சேர்க்கப்பட்டுள்ளது. அது violet வண்ணத்தில் கடைசியாக உள்ளது. அதனை வாசித்து விட்டு இன்றைய விருந்திற்குள் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. சிரமத்திற்கு பொருத்தருள்க.

ஏன், ‘அறிவே’, ‘தெய்வம்’ எனப்படுகின்றது?அ.வி.எண்.59—(4/?)

22-02-2015 – ஞாயிறு

வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

 

கடந்த அறிவிற்கு விருந்தின் தொடர்ச்சியாக இன்று ‘Entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்கு மேலும் பொருள் விளங்கிக் கொண்டு, எவ்வாறு இறை ஆட்சியின்றி இப்பிரபஞ்சத்தை ஆண்டு கொண்டிருக்கின்றது என்று பார்க்க இருக்கிறோம்.
மிகவும் பழைய ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி ‘Entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்குக் கூறும் அர்த்தத்தைக் கவனிப்போம்.
entelechy= 1) realization
2) becoming or being of what was potential
3) developed perfection
4) what gives perfection
‘Entelechy’ என்பது
1. வார்த்தைகளால் சொல்ல முடியாத இயற்கையின் தன்மையை,
2. என்ன இருந்ததோ அது வெளிப்படுவதை,
3. முன்னேற்றம் அடைந்து முழுமை அடைவதை,
4. பூரணத்தைக் கொடுக்கக் கூடியதைக் குறிக்கின்றது.

‘Entelechy’ என்கின்ற வார்த்தைக்கான ஆழ்ந்த பொருளை எந்த அளவிற்கு விளங்கிக் கொண்டு, மனதில் உருவகப்படுத்த முடிகின்றதோ அந்த அளவிற்கு இறையின் தன்மாற்றத்தில் உள்ள பிரமிப்போ, ஐயமோ, திகைப்போ இல்லாது போய்விடும். விளக்கம் தெளிவாகிவிடும்.

அறிவு மூன்று வகையில் செயல்படுகின்றது. உயிரடற்ற சட்பொருட்களில் ஒழுங்காற்றலாகவும், உயரினங்களில் உணர்தலாகவும், மூன்றாவதாக மனிதனில் தன்னையே உணர்ந்து கொள்ளக்கூடியதாகவும் செயல்படுகின்றது. இதற்கு உதாரணம் – இறையாகிய அறிவு தன்னையே அறிந்து கொள்வதற்காகவேதான் நம்முடைய இணையதள சத்சங்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது.

உயிரற்ற சடப்பொருட்களில் அமைப்பு (pattern) துல்லியம் (precision), ஒழுங்கு (regularity) ஆகியவைகளுக்குக் காரணமான ஒழுங்காற்றலாகவும் (order of function),

உயிரற்ற சடப்பொருட்களில் அமைப்பு (pattern) துல்லியம் (precision), ஒழுங்கு (regularity) ஆகியவைகளுக்குக் காரணமான ஒழுங்காற்றலாகவும் (order of function), விளங்குகிறது.

உதாரணத்திற்கு அணு அமைப்பை (Structure of an atom) எடுத்துக் கொள்வோம். அணுவின் மையத்தில் அணுக்கரு (necleus) உள்ளது. அதனை எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன. எலக்ட்ரான்கள் தன் விருப்பம் போல் சுற்றி வருவதில்லை. எலக்ட்ரான்கள் ஒழுங்குடன் தத்தம் பாதையில்(orbit) சுற்றி வருகின்றன. முதல் பாதையில்(K), இரண்டாம் பாதையில்(L), மூன்றாம் பாதையில்(M) எவ்வளவு எலக்ட்ரான்கள் இருக்க வேண்டும் என்பது 2n² என்கின்ற சாம்யத்திற்கு (formula) உட்பட்டுத்தான் சுற்றி வருகின்றன. n என்பது பாதையின் எண். உதாரணத்திற்கு முதல் பாதைக்கு n=1, இரண்டாம் பாதைக்கு n=2, மூன்றாம் பாதைக்கு n=3. ஆகவே முதல் பாதையில் 2 (2n² = 2 x 1² =2), இரண்டாம் பாதையில் 8 மூன்றாம் பாதையில் 18ஆக இருக்கும். இந்த சாம்யத்தை அதற்கு சொல்லியது யார்?. இந்த சாம்யத்துடன் அணுவை அமைத்துக் கொள்ளும் ஒழுங்காற்றல் — தன்மையைத்தான் உயிரற்ற சடப்பொருட்களிலும் அறிவு இருக்கின்றது என்கின்றது வேதாத்திரியம்.

“உணர்ச்சியாய்ச் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று
உணா்ந்திருந்தேன் பல நாள்; மேலும் உண்மை விளங்க
உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும்
உனது திரு நிலையும் அறிவே என உணர்ந்தேன்”

…. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

சடப்பொருட்களிலும் அறிவு இருக்கின்றது, ஆனால் ஒழுங்காற்றலாய் உள்ளது என்பதனை விஞ்ஞான உதாரணத்தோடு விளங்கிக் கொள்வோம்.

அணு எண் 33ஐக் (Atomic Number=33) கொண்ட ஆர்சனிக் என்ற தனிமத்தின் அணு அமைப்பினைக் காண்க. (அணு எண் = எலக்ட்ரான்களின் எண்ணிக்கை).

arsenic

 

• கடைசி பாதையில் எட்டு எலக்ட்ரான்களுக்கு மேல் இருக்காது. இதற்கு Octet rule என்று பெயர்.

கடைசி பாதையில் எட்டு எலக்ட்ரான்கள் இருந்தால் அந்த அணு நிலைத்த(stable) அணுவாகும். உதாரணம் நியான் மற்றும் ஆர்கான்.inert gas

 

விஞ்ஞானத்தில் உள்ள எந்த நியதிகளுக்கும் (laws) காரணம், அறிவு என்கின்ற ஒழுங்காற்றலின் கருணைதான். இதனை பாடலின் வழியாக எடுத்துச் சொல்வதை மீண்டும் நினைவிற்குக் கொண்டு இறையை நினைந்து மகிழ்வோம். அறிவு ஒழுங்காற்றலாக செயல்படும் விஞ்ஞான நியதிகளையெல்லாம், அவ்வப்போது, மனிதனின் அறிவின்(அதுவும் இயற்கையே) வழியாகத் தெரிவித்து, அதனை மனிதனுக்கு வேண்டிய வளமாக மாற்றி அனுபவிக்க வைத்தமையை ‘கருணை’ என்று சொல்லாமல் வேறு எவ்வாறு சொல்வது? இதுவும் “தனிப் பெருங்கருணை” என்று வள்ளலார் கூறுவதில் அடங்கும். இந்த கருணையைப் புரிந்து கொள்ளாமல் மனிதகுலம் இயற்கையோடு/இறையோடு போராடுவது எவ்வளவு துரதிருஷ்ட வசமானதாக உள்ளது.

உயிர்களில் ஒழுங்காற்றலாக இருப்பதோடு உணர்தலாகவும் (cognition), அனுபவிப்பதாகவும் (expeience), பிரித்துணர்தலாகவும் (discrimination) செயல்படுகின்றது.

மனிதனிடம் இந்த ஆறு பணிகளுக்கும் அப்பால், தன்னையே உணரக்கூடியதாகவும் (realisation) உள்ளது என்கின்றார் மகரிஷி அவர்கள். அதனால் தான் மனிதன் உயிரினங்களிலே அரிதான பிறவி என்கிறார் அவ்வையார். அறிவின் நிலையை விளக்கும் மகரிஷி அவர்களின் கவியை நினைவு கூர்வோம்.

மெய்ப்பொருள் (19-04-1984)

தோற்ற மெல்லாம் மெய்ப்பொருளே அவ்வதற்குள்
தொடர்ந்து விரிந்தியங்க ஒழுங்காக ஆற்றும்
ஆற்றலெல்லாம் அறிவாகும், அறிவின் மூலம்
அதன்வளர்ச்சி பூரணம் ஐம்புலன் உணர்வால்
ஏற்ற பருமன் விரைவு, காலம், தூரம்
எண்ணி ஒத்திட்டுணர்ந்து இன்ப துன்பம்
தோற்றத்தால் ஏற்றத்தாழ்வு இவற்றை வேறாய்,
தெளியும் நிலை உணர்; அறிவின் நிலை விளக்கும்.
…..வேதாத்திரி மகரிஷி அவர்கள்

இறை எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது என்றால் அறிவு இல்லாத பொருளோ, இடமோ, அல்லது நிகழ்ச்சியோ இல்லை என்பதுதான் பொருள். தொடரும்.

அடுத்த விருந்தில் எவ்வாறு இறை ஆட்சி யின்றி இப்பிரபஞ்சத்தை ஆண்டு கொண்டிருக்கின்றது என்பதனையும், எல்லாமே தெய்வம் என்றாலும், அவற்றில் அறிவும் ஒன்றாக இருந்தாலும், ‘அறிவே தெய்வம்’ என்பது எவ்வாறு இதமாக உள்ளது என்பதனைப் பார்ப்போம்.