இனிதினும்  இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 1/?

 

Announcement_28-03-2015_Vethathiri_Maharishi

FFC – 69

 இனிதினும்  இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 1/?

 

                          28-03-2015

    ன்று 28-03-2015 வேதாத்திரி மகரிஷி அவர்கள் மகாசமாதி அடைந்த நாள் – (9 வது ஆண்டு நினைவு நாள்).  மகரிஷி அவர்கள் 1911 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 14 ம் நாள் சென்னைக்கு அடுத்த,  கூடுவாஞ்சேரி கிராமத்தில், சின்னம்மாள் மற்றும் வரதப்பன் என்கின்ற தம்பதியருக்கு எட்டாவது குழந்தையாக அவதரித்தார்.   அவருடைய பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்புடன் முடிந்துவிட்டது. பிறகு இரவுப்பள்ளியில் சேர்ந்து ஆங்கிலம், தமிழ், கணக்கு ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.  இரவுப்பள்ளியில் படித்தது நான்காவது பாரத்திற்குச் (IV Form) சமம் என்று அவரது ஆசிரியா்கள் கூறியதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

    ஆனால் அவர் கண்டுபிடித்த இயற்கையியல்/இறையியல் மற்றும் வாழ்வியல் உண்மைகள்/கண்டுபிடிப்புகள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடங்களாக போதிக்கப்படுகின்றன.  அவர் எந்த பல்கலைக்கழங்களிலும் படித்துப் பட்டம் பெறாதவர்.  ஒரு முறை அமெரிக்காவில் அருளுரை ஆற்றிய பிறகு கேட்கப்பட்ட வினாக்களுக்கெல்லாம் தயக்கமின்றி விடை அளித்ததை வியந்து ஒருவர், மகரிஷியை ‘எந்த  University ல் படித்தீர்கள்’  என்று கேட்டதற்கு மகரிஷி அவர்கள் கூறிய பதில் –  “I studied in the city of Universe”. உண்மைதானே.  அவர் படித்ததெல்லாம் பிரபஞ்சம் எனும் பல்கலைகழகத்தில் தானே! பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து நிற்கும் பேறு கிடைத்ததால் அங்கிருந்து அனைத்தையும் அறிந்து கொண்டார் மகரிஷி அவர்கள்.  மகரிஷி அவர்கள் தன்னிலை உணர்ந்தவர்.  அவருள் மகானாக்கும் நான்கு உன்னத கேள்விகள் எழுந்தன?

    அவையாவன:

1)   கடவுள் என்பவர் யார்?  அவர் இந்த உலகைப் படைத்தார்?

2)   உயிர் என்பது என்ன?

3)   இன்பம் துன்பம் என்பது என்ன?

4)   வறுமை ஏன் வருகின்றது?

    இந்த நான்கு கேள்விகளுக்கும் விடைகள் கண்டுபிடித்து, அவற்றை சரிபார்த்து சமுதாயத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதுதான் வேதாத்திரியம்.  உலக சமுதாயம் இன்றுள்ள நிலையிலிருந்து உய்ய வேண்டுமென்றால் வேதாத்திரியத்தைத் தவிர வேறு நிவாரணம் ஏதும் இல்லை என்றே தான் சொல்ல வேண்டும்.   வேதாத்திரியம் உலகிலிலுள்ள எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வுகளைக் கூறுகின்றது.  உலக ஒற்றுமையை, உலக சகோதரத்துவத்தையும், ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கின்ற உண்மையையும் எடுத்துக் கூறுகின்றது வேதாத்திரியம்.

     இவ்வளவு சிறப்பு வாய்ந்த குழந்தை வேதாத்திரியை இதுவரை இயற்கை அன்னை பெறவில்லை எனக் கூறும் அளவிற்கு மகரிஷி அவர்கள், தம்முடைய மாணவர்களுக்குத்   தெளிவை ஏற்படுத்தி, சிந்திக்கத் தூண்டி,  இருளில்  இருந்த  மனதை அறிவொளியைக் கொண்டு பிரகாசிக்கச் செய்துள்ளார்.  மொத்தத்தில் மனிதன், பண்பில் ஏற்றம் பெற பண்பேற்றக் கல்வியினை அளித்துள்ளார்.  மாற்றிச்சொல்ல வேண்டுமென்றால், மனிதகுலத்தை, நலமுடன், அமைதியாக வாழவைக்க வேண்டிய பொறுப்புடைய இறை/இயற்கை, இதுவரை அவ்வப்போது மனிதத் தெய்வங்கள் வழியாகச் சொல்லி வந்ததனைத்தையும் தொகுத்து, காலத்திற்கேற்ப, வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழியாக ஒட்டுமொத்தமாகச் சொல்லி விட்டது என்பதுதான் சரியாக இருக்கும்.  அதாவது அப்பட்டமாக இறை, வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழியாக வெளிப்பட்டுவிட்டது எனலாம்.  அறிவாகிய இறையே  மாந்தருள்ளும் அறிவாக இருப்பதால் சமுதாயம் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் செய்து கொண்டிருக்கின்றது.  யாராக இருந்தாலும் இயற்கை நியதி எல்லோருக்கும் ஒன்றே என்பதால், தோன்றியவர்  மறைவதும் இயற்கை என்பதால், மனிதகுலத்தின் அறிவுக்கண்களை எல்லாம் திறந்து வைத்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் 2006 ம் ஆண்டு, 28 நாள் தன் பூதவுடலை நீத்தார்.

     அவரது  பூத உடல்  நம்மிடையே இல்லையே தவிர அவா் நம்முடன் வாழ்ந்து கொண்டு, பேசிக் கொண்டு, அறிவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்.  ஏனெனில் ஆன்மா அழியாததன்றோ! அவர் அருளியுள்ள 1854 பாடல்கள் வழியாகவும், எழுதியுள்ள நூல்களின் வாயிலாகவும், குறிப்பாக, அவா் எழுதிய ‘எனது வாழ்க்கை விளக்கம்’ எனும் நூல் வழியாகவும் நம்முடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.  அவர் மறைந்த இந்த நாளில் நாமெல்லாரும் ஒன்று கூடியிருக்கிறோம்.   எதற்காக?  அவ்வையார் கூறும் வகையில் இனிதினும் இனிதை அனுபவிக்க, அறிவினரை, அவரை, கனவிலும், நினைவிலும் கண்டுகளித்துக் கொண்டிருந்தாலும், இதுவரை மகரிஷி அவர்களைப் பற்றி அறியாதவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக கூடியிருக்கிறோம்.

    ஒருவர்   மறைந்த தினத்தை வருடந்தோறும், நினைவு தினமாக கொண்டாடும் வழக்கம் சமுதாயத்திலும், குடும்பங்களிலும்  உள்ளது.  தலைவர்கள், சான்றோர்கள் மறைந்த தினத்தை சமுதாயமே கொண்டாடும்.

    தலைவர்களை, சான்றோர்களை நினைவிற் கொள்ளுதல் என்றால் என்ன?  அவர்கள் கூறிய அறிவுரைகளை, ஆராய்ந்து, உறுதிபடுத்திக் கொண்டு, அவர்கள் கூறியுள்ளதுபோல், நம்முடைய குணநலன்களை உயா்த்திக் கொண்டு பண்பேற்றம் பெறுவதே, அவர்களை நினைவிற் கொள்ளுதலின் நோக்கமாகும்.  சான்றோரைப் பின்பற்றி வாழ்பவர்கள், எப்போதும், தினந்தோறும் அவர்களை நினைவிற்கொண்டிருந்தாலும், சான்றோர் மறைந்த தினத்தன்று, அவரைப் பின்பற்றி வாழ்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி சான்றோருக்கு மரியாதையும், நன்றியும் தெரிவித்துக் கொள்ளும் வகையில் நினைவு தினமாக கொண்டாடுகின்றனர். மேலும், அச்சான்றோரை அறியாதவர்கள், மற்றும்  வருங்கால சமுதாயத்தினருக்கும் அச்சான்றோரைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர்களையும் அச்சான்றோர் கூறிய அறவழியில் வாழ்வதற்கு  அழைப்பு விடுவது நினைவு தினத்தில் வழக்கம்.

    இந்த அறிவிற்கு விருந்தில்,  நம் குருபிரானை எவ்வாறு, எப்போதும் நினைவில் கொள்வது பற்றி மகரிஷி அவர்களே கூறுகின்ற வழியில் ஆராய இருக்கிறோம்.  அதற்கு முன்னர் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்துகாட்டிய பேரறிவின் அம்சங்களான மனிதத்தெய்வங்கள் அனைவரின் அறிவாற்றலும் துணை நிற்க வேண்டுவோம்.

         குரு வணக்கம்    (11-08-1981)

“அறிவேதான் தெய்வம் என்றார் தாயுமானார்;

அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி,

அறிவதனை அறிவித்தார் திரு வள்ளுவர்;

அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்,      

அறிஞா் திருமூலர்;  அவ்வறிவில் ஆழ்ந்து,

ஆனந்தக் கவியாத்தார் இராம லிங்கர்,

அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,

அதை வாழ்ந்துகாட்டினோர், நினைவு கூர்வாம்”

….வேதாத்திரி மகரிஷி அவர்கள். 

 

    அவ்வையார் கூறும் இனிதினும் இனிதை அனுபவிக்க, அவரை அவரது பாடலின் வழியாக நினைவு கூர்ந்து, வணங்கி, அவரை நம் சத்சங்கத்தில் சூக்குமமாக எழுந்தருளச் செய்வோம்.

FFC-70-இனிது இனிது அவ்வையார் பாடல்

பொருள்:முருகன் கேட்ட‘இனியதுஎது?’ என்கின்ற ஒரு கேள்விக்கு விடையாக நான்கு இனியவைகளைக்  கூறுகிறார் அவ்வையார்.  அவ்வையார், தான் கூறும் இனியவைகளை அதன் அளவிற்கேற்றவாறு வரிசைப்படுத்திக்கூறுகிறார்.

1)   ஏகாந்தம்இனிது.

2)   அதனினும்இனிதுஆதியைத்தொழுவது.

3)   அதனினும்இனிதுஅறிவினரைச்சோ்ந்திருத்தல்.

4)   அதனினும்இனிதுஅந்தஅறிவுள்ளோரைக்கனவிலும், நினைவிலும்காண்பதுதான்.

இந்தநான்குஇனியவைகளையும்வரிசையாகஒவ்வொன்றாகச்சிந்திப்போம்.

1)   ஏகாந்தம்இனிது?

இனிது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இனிது என்றால் மனதுக்கு நிறைவு அல்லது மகிழ்ச்சியைத் தருவது என்று பொருள். துன்பமும் சலிப்பும் இல்லாதநிலை.  எல்லோரும் விரும்புவது இன்பம்.  ஆனால் வாழ்க்கையில் துன்பமும் வந்து விடுகின்றது. சலிப்பும் வருகின்றது.  சலிப்பு என்பதுஎன்ன? சலிப்பு என்பது ஒன்றையே மீண்டும் மீண்டும் செய்வது ஆகியவற்றால் அல்லது துன்பம் மிகுதியால் வரும் சோர்வு அல்லது வெறுப்பு ஆகும்.

இன்பமே அனுபவிக்க விரும்பும் மனிதனுக்குத் துன்பம் வருகின்றது என்றால் எப்படி இருக்கும் அவனது மனம்? துன்பம் மிகமிக சலிப்பும், வாழ்க்கையின் மீது வெறுப்பும் உண்டாகும். தான் விரும்புகின்ற இன்பத்தைப் புலன்களின் வழியாக மட்டுமேதான் அடைவதற்குத் தெரிந்து வைத்திருக்கிறான் மனிதன். புலன்வழி இன்பம் ஒருஅளவிற்கு மேல் சென்றால் அதுவே துன்பமாக மாறிவிடும்.

இதுவரை விஞ்ஞானம்கூட எடுத்துரைக்காத இன்பதுன்ப விஞ்ஞானத்தை (Science of Enjoyment)மகரிஷி அவர்கள் காந்தத்தத்துவம் (Philosophy of Magnetism) வழியாக அழகாக எளிமையாக எடுத்து இயம்புகிறார்.  “இன்பம் புறப்பொருளில் இல்லை” என்று கூறப்படுகின்ற ஆன்மீகத் தத்துவத்தை மகரிஷி அவர்கள் விஞ்ஞானமாக்கியுள்ளார்.

அவ்வையாரின் கூற்றிற்குச் செல்வோம்.  அவர் கூறும் ஏகாந்தம் (solitude)என்பதுதனிமையும், அமைதியும்நிறைந்தது.  தனிமையும் அமைதியும் புலன்கள் இயங்காத நிலையாகும்.  அதாவது புலன்களைத் தேவைக்கு மீறி அதிகமாகப் பயன்படுத்தினால் துன்பமும் சலிப்பும் வரும். தேவைக்கு  மீறிய முறையை மாற்றி, தனிமையையும் நாடினால் இன்பம் இருக்கும் என்கிறார் அவ்வையார்.

2)   அதனினும்இனிதுஆதியைத்தொழுதல்:

       ஏகாந்தத்தை விட இனியது ஆதியைத் தொழுதல் என்கிறார்.  தொழுதல் என்ன என்பது யாவரும் அறிந்ததே.  தொழுதல் என்றால் வணங்குதல், வழிபடுதல் என்று பொருள்.   பொதுவாக  வழிபடுதல் என்றால் கடவுளை வழிபடுவதாகும்.  எனவே அவ்வையார் ஆதியைத் தொழுதல் என்கிறார் என்றால், ஆதி, கடவுளாகின்றது.

     யார்இந்தஆதி?  அவ்வையார்கூறும்  ஆதி யார்?  எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டுள்ளது போல், உலகம் ஆதிபகவனை முதலாகக் கொண்டுள்ளது என்கிறார் திருவள்ளுவர். அந்த ஆதிபகவன்தான் (ஆதியாகியபகவன்) அவ்வையார்கூறும்ஆதி.   ஆதிஎனும்இறைவன்உருவக்கடவுள்இல்லை. அப்படியானால் அவ்வையார் குறிப்பிடும் இந்தக் கடவுள் எப்படி ஆதிஎனும் பெயர்பெற்றார்?  ஆதி என்கின்ற சொல்லின் பொருளைக் கொண்டே ஆதி என அழைக்கப்படுகின்றார் கடவுள்.

      ஆதிஎன்கின்றசொல்லிற்கானப்பொருட்கள்:

1)   முதல்

2)   தொடக்ககாலம்

3)   தொடக்கம்அறியப்படமுடியாதபழமை

4)   அடிப்படை

     ஏதோ ஒன்று தான், துகள்கள் (particle  in  science)முதல், அதனைத் தொடர்ந்து பஞ்சபூதங்கள், அதனைத் தொடர்ந்து இந்தப் பிரபஞ்சம்,  அதனைத் தொடர்ந்து ஓரறிவுமுதல் ஆறறிவு வரையிலான மனித இனமாக தன்மாற்றம்(self transformation)அடைந்துள்ளது.  அந்தப்பொருள் தான்

  • காணுகின்றபிரபஞ்சம்முதல்உயிர்கள்வரைஎல்லாத்தோற்றங்களுக்கும்முதலாகி  தன்மாற்றம்அடைந்துள்ளதாலும்,
  • முதல்துகள்உருவாகியகாலத்திலிருந்தும்அதாவது, தொடக்ககாலத்திலிருந்தும்,
  • அதனுடையதொடக்கம்அறியமுடியாதபழமையானதாகவும்,
  • எல்வாவற்றிற்கும்அடிப்படையானதாகவும்இருந்தது.

எனவே, அந்தஒன்று  “ஆதி” என்கின்ற சொல்லிற்கான பொருள் அனைத்தையும் கொண்டிருந்ததால்  அவ்வையார் அதனை “ஆதி”என்று அழைக்கிறார்.  கடவுளுக்கு ஆதிமூலம் என்கின்ற பெயரும்உண்டு.  அதாவது பிரபஞ்சத்திற்கு மூலமான துகள்களுக்கு ஆரம்பமாகவும், ஆதியாகவும் உள்ளதால் அது ஆதிமூலம் என்று அழைக்கப்படுகின்றது.  விஞ்ஞானத்தின்படி இப்பிரபஞ்சத்திற்கு மூலம் துகள்கள்.  அந்த மூலமான துகள்களுக்கு ஆரம்பமாக இருந்தது என்பதால் மூலத்திற்கு ஆதிநிலை(primordial state)என்பதால் அது ஆதிமூலம் என அழைக்கப்படுகின்றது.

 ஆதி என்று மட்டும்  சொல்லவில்லை, அதனையே இறைவன் என்கிறார்.  எது இறைவனாக இருக்கமுடியும்?  இறைவனுக்கு இலக்கணம் வகுத்துக்கொண்டு, ஆறாம்அறிவு, இறைவனைத் தேடினால், இந்த ஒன்றினைத் தானே இறைவன் என ஏற்றுக்கொள்ளும்.  எது அல்லது யார் அந்த ஆதி?  தன்னிலுள்ள ஆற்றலை இப்பிரபஞ்சமாகவும், உயிரினங்களாகவும் வெளிப்படுத்திய ஒன்றுதான் அந்த ஆதி.   அதுதன்னை, வெளிப்படுத்தியதால்,  ‘ வெளி ’ (Eternal Space) என்கின்றக் காரணப்பெயரை பெறுகின்றது.

இப்பிரபஞ்சத்தின் ஆதிநிலைதான் இறைவன் என்பதால், அந்த ஆதியைத் தொழுதல் இனிது என்கிறார் அவ்வையார்.  தொழுதல் இனிதுஎன்றுகூறுவதையும்கவனிக்கவேண்டும். உருவமிலா இறையை எவ்வாறு தொழுவது?  அருவமான இறைதான் (பரமாத்மா) அறிவாகவும் (ஜீவாத்மா), மனமாகவும்  வந்துள்ளது.  எனவே மீண்டும் பரமாத்மாவுடன் ஜீவாத்மாவை இணைப்பதுதான் இறைக்கு இணக்கமான இறைவணக்கமாக இருக்க முடியும். அப்படியானால்  அதனை எவ்வாறுதொழுவது எனில்,  அருவ வழிபாட்டின் மூலமாகத்தான் தொழமுடியும்.  அதுதான் விஞ்ஞான காலத்திற்கேற்ற அகவழிபாடாகும்.  மனவளக்கலை யோகாவில் அதுதான் துரியாதீத தவமாகும்.  ஆகவே துரியாதீத தவத்தை இயற்றுவது இரண்டாவது இனிதாக அவ்வையார் கூறுகிறார்.  அடுத்ததாக மூன்றாவது இனிதிற்குச்செல்வோம்.

3)  அதனினும்இனிதுஅறிவினரைச்சேர்தல்:

ஆதியைத் தொழுவது என்பது ஒரு குருவின் வழியாகத்தான் சாத்தியமாகும். உதாரணத்திற்கு  மனவளக்கலையோகிகள் துரியாதீததவத்தை இயற்றுவதே வேதாத்திரிமகரிஷி அவா்களை குருவாக ஏற்றுக்கொண்டததால் தானே சாத்தியமாயிற்று.  “குரு இல்லாத வித்தை பாழ்” மற்றும்“குருவருள் இன்றேல் திருவருள் இல்லை” என்பதால், அகத்தவம் இயற்றுவதற்கு அறிவினர்ச் சேர்க்கை, வழிகாட்டியாக இருக்கும். அறிவை அறிந்த அறிஞராகிய ஒருவரைத்தான் அவ்வையார் அறிவினர் என்கிறார். அவரைச் சேர்ந்திருத்தல்  அதனினும் இனிது என்று இனியவையின் அதிகப்படி வரிசையில் (increasing order of ecstasy)மூன்றாவதாகக் கூறுகிறார்.

     அறிவினரைச்சோ்தல் என்பதற்கு இலக்கணம் வைத்துள்ளார் அவ்வையார்.  அறிவினரைச் சோ்தல் என்பது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.  ஆனால் அறிவினரைப் பார்த்தோம், சேர்ந்தோம் என்றிருப்பது மட்டும் அவ்வையார் கூறும் அறிவினரைச் சோ்தல் அல்ல. பின்னா் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை நான்காவது இனியதாகக் கூறுகிறார் அவ்வையார். அடுத்த அறிவிற்கு விருந்தில் ‘அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது அதனினும் இனிது  என்பது எவ்வாறு?’ என்பதனை அடுத்த அறிவிற்கு விருந்தில் (01.04.2015) அறிவோம். .. .தொடரும்.