avvai-thiruvalluvar_lotus

அவ்வையார்                                                                            திருவள்ளுவர்

  • அவ்வையார் போற்றி

    அறிவினர் சேர்தல் இனிது; அதனினும் இனிது! அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே!” — அவ்வையார்

    (அறிவினர் சேர்தல்=அறிவையறிந்த குருவின் சத்சங்கம்)

  • திருவள்ளுவர் போற்றி

    பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.” — குறள் எண்-350

    (பற்றுக பற்றற்றான்= அறிவை அறிந்த நல்லோரைப் பற்றுவதே சத்சங்கம்)

    “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.” — குறள் எண்- 341

குருதேவர் வேதாத்திரி மகரிஷி சீடர்களுடன்

காப்பு

நல்ல பயனுள்ள அறச் செயல்களும், அதற்கேற்ற எண்ணங்களும் எவரிடம் இயங்குகின்றனவோ அவரைச் சுற்றிலும் நுண்ணலையாகிய அருட்பேராற்றலும் சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும், அளிக்கும். அனுபவத்தைக் கண்டு இன்புறுவீர்களாக.”

 “அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,அதை வாழ்ந்துகாட்டினோர், நினைவு கூர்வாம்”

….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்

ஸத்சங்கம்

ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம். நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் I நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம் நிஸ்சலதத்வே ஜீவன் முக்தி: II”

-பஜ கோவிந்தம்

பொருள்: நல்லோருடைய உறவினால் பற்றின்மை உண்டாகும். பற்றின்மை ஏற்படுமானால் மதி மயக்கம் நீங்கும். மதியினுடைய மயக்கம் நீங்கினால் என்றும் மாறுபடாத உண்மை விளங்கிவிடும். என்றுமே மாறுபடாத உண்மை விளங்கினால் அதுவே ஜீவன் முக்தி!

வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்.